Show all

எல்லோரும், ‘நான் அதுக்குச் சரிப்பட்டு வரமாட்டேன்’ என்கின்றனர்! எழுவரை விடுதலை செய்யும் அதிகாரம் யாரிடந்தான் இருக்கிறது

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்று தண்டனைக் காலம் எல்லாம் முடிந்து போயும் கூட யாருக்கும் தெரியமாட்டேன் என்கிறது. ஆனால் எல்லோருமே, ‘நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்’ என்று எல்லோரும் பொறுப்பைத் தட்டிக் கழிக்கின்றார்கள். 

22,தை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒரு படத்தில் வடிவேலுவை சிங்கமுத்து, ‘நீ அதுக்குச் சரிப்பட்டு வரமாட்டே’ என்று சொல்லுவார். படத்தின் முடிவு வரை தான் எதுக்கு சரிப்பட்டு வரமாட்டோம் என்று வடிவேலு புலம்ப, அதற்கான விடை அவருக்குத் தெரிவிக்கப் படவே பாடாது. 

பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுதலை செய்ய யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்று தண்டனைக் காலம் எல்லாம் முடிந்து போயும் கூட யாருக்கும் தெரியமாட்டேன் என்கிறது. ஆனால் எல்லோருமே, ‘நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்’ என்று பொறுப்பைத் தட்டிக் கழிக்கின்றார்கள். 

இந்த எழுவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதில், தண்டனையை நிறைவேற்றிக் கொண்டிருப்பதில் பொறுப்புள்ள- விசாரணை அதிகாரிகள், விசாரணை அமைப்புகள், காவல்துறை, சிறைச்சாலை, அறங்கூற்றுமன்றம், ஒன்றிய அரசு, தமிழக அரசு, அண்மையில் தமிழக ஆளுநர், இப்போது குடியரசுத் தலைவர் என்று யாரும், ‘இதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்’ என்று ஒதுங்கிக் கொண்டால் யாரிடம் தாம் இவர்களை விடுவிக்கும் அதிகாரம் இருக்கிறது? என்று சமூக அக்கரையுள்ளவர்கள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கின்றனர்.

கடைசியாக, தன்னை விடுவிக்க வேண்டும் என பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் 7 நாட்களில் முடிவெடுக்க ஆளுநருக்கு உச்சஅறங்கூற்றுமன்றம் கெடு விதித்திருந்தது. இத்தனை நாள் காலந்தாழ்த்திய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ‘நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன், குடியரசு தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும்’ என்று தற்போது கைவிரித்துள்ளார். எழுவர் விடுதலைப்பாட்டில், ‘நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்’ என்று தமிழக அரசு தனது பரிந்துரையை ஆளுநர் பன்வாரிலாலுக்கு அனுப்பி விட்ட நிலையில், தற்போது புரோகித் அதை நிராகரித்திருக்கிறார்.

பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் நிராகரித்தார். எழுவர் விடுதலைப்பாட்டில் குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் சட்டப்பிரிவு 161-ன் படி 7 பேரை விடுவிக்க வேண்டும் என தமிழக அமைச்சரவை 2 ஆண்டுகளுக்கு முன் பரிந்துரை செய்திருந்தது. இந்தச் சூழலில், தன்னை விடுவிக்க வேண்டும் என பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் 7 நாட்களில் முடிவெடுக்க ஆளுநருக்கு உச்சஅறங்கூற்றுமன்றம் கெடு விதித்திருந்தது.

இந்த வழக்கு செவ்வாய்க் கிழமை உச்ச அறங்கூற்றுமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசின் பரிந்துரையை தமிழக ஆளுநர் நிராகரித்திருக்கிறார்.

முன்னதாக இன்று சட்டப்பேரவையில், எழுவர் விடுதலையில் விரைவில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்திருந்தார். 

மேலும் அவர், அதிமுக அரசு 7 பேருக்கும் விடுதலை கிடைக்க வேண்டும் என உண்மையாகச் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். அத்தோடு மட்டுமல்லாமல், ஆளுநரைச் சந்திக்க வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் 7 பேர் விடுதலை தொடர்பாக விரைவில் முடிவெடுக்க வலியுறுத்தி வருகிறோம். 7 பேர் விடுதலைப்பாட்டில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என நாம் நம்புகிறேன்’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி இருந்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.