13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கருப்புப்பணத்தை ஒழிப்பதற்காக என்று எடுக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையில் 99.3 விழுக்காடு தொகை மீண்டும் வங்கிகளுக்கு திரும்பிய நிலையில், மோடி அமித்சா குழுமம் மற்றும் இந்தக் குழுமத்திற்கு நட்பான கார்ப்பரேட்டுகள் கருப்புப்பணத்தை மாற்றுவதற்காக இந்தத் திட்டத்தை நடுவண் அரசு கொண்டு வந்ததா? என்று மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ள கீச்சுப் பக்கத்தில், வெறுமனே 13 ஆயிரம் கோடியை ஒழிக்கவா நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரையும் இழந்து, பல நிறுவனங்களையும் மூட நடுவண் அரசு பண மதிப்பிழப்பை அறிவித்தது? என கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக தனது கீச்சுப் பக்கத்தில் இன்று மோடி மற்றும் நடுவண் அரசை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார். மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் தாள்களின் மதிப்பில் 99.3 விழுக்;காடு அளவிலான பணம் வங்கிகள் மூலம் மீண்டும் நடமாட்டத்தில் விடப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. என்னுடைய முதல் கேள்வி, கருப்புப் பணம் எங்கே போனது? பெரும் பண முதலைகள் தங்களிடம் இருந்த கருப்புப்பணத்தை எல்லாம் சப்தமில்லாமல் வெள்ளையாக மாற்றிகொள்வதற்குதான் மோடி அரசு இந்த பண மதிப்பிழப்பு திட்டத்தை கொண்டு வந்ததா? என்பது எனது இரண்டாவது கேள்வி என தன்னுடைய முகநூல் பக்கத்தில் மம்தா குறிப்பிட்டுள்ளார். நாட்டின் பொருளாதாரத்தையே சீரழித்த மோடி இடத்தில் செயலலிதாவோ, கருணாநிதியோ இருந்திருந்தால், வாழ்க்கை முழுவதும் சிறையில்தான் கிடக்க வேண்டியிருக்கும். செயலலிதாவாக இருந்தால் திமுக விடாது, கருணாநிதியாக இருந்திருந்தால் அதிமுக விட்டிருக்காது. நூறு விழுக்காடு தண்டிக்க வாய்ப்புள்ள, சோணங்கி காங்கிரஸ் தாங்கள் ஆட்சிக்கு வந்தாலும், எதுவும் செய்யாது. வாழ்க இந்தியா! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,894.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



