13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பணமதிப்பு நீக்கத்தால் செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 ரூபாய்தாள்கள் 99.3 விழுக்காடு வங்கிக்குத் திரும்பிவந்து விட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதால், தண்டனைக்குப் பிரதமர் மோடி தயாராக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நினைவு படுத்தியுள்ளார். தலைமை அமைச்சர் மோடி நாடாளுமன்றத்தில் கறுப்புப்பணம், கள்ளநோட்டு, தீவிரவாதத்தை ஒழிக்க பணமதிப்பு நீக்கத்தை கொண்டு வந்துள்ளோம் என்று பேசினார். நான் ஏதேனும் தவறு செய்தால் என்னைத் தண்டியுங்கள் என்று பணமதிப்பு நீக்கத்துக்குப் பின் மோடி பேசினாரே அது குறித்து நிருபர்கள் கார்கேயிடம் கேட்டனர். அதற்கு கார்கே கூறுகையில், நான் மோடியிடம், பணமதிப்பு நீக்கத்துக்குப் பின், நீங்கள் கூறியது நடக்காவிட்டால், பணமதிப்பு நீக்கம் தவறாக அமைந்தால் உங்களை எங்கு வைத்துத் தண்டிப்பது என்று கேட்டேன். இப்போது தவறாக அமைந்துவிட்டது. தலைமை அமைச்சர் மோடியே டெல்லியில் உள்ள விஜய் சவுக் பகுதியில் தண்டிக்கலாமா அல்லது வேறு எங்குமா? இதைப் தலைமை அமைச்சருக்கு நினைவு படுத்திவிடுகிறேன். ஆதலால், மோடி தண்டனைக்கு தயாராக இருப்பார் என நினைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். பாவம் மல்லிகார்ஜுன கார்கே நீங்கள்! வங்கி கணக்கில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும், 15 இலட்சம் போடுவோம் என்று கூறிய பாஜகவினர் தற்போது அப்படியெல்லாம் சொல்ல வில்லை என்று மாற்றிக் கொள்ள வில்லையா? 'நான் ஏதேனும் தவறு செய்தால் என்னைத் தண்டியுங்கள்' என்று சொல்லவேயில்லை என்று நூறு கோயில்களில் சத்தியம் செய்வார் மோடி. கண்ணகி வழக்குரைத்ததும், யானோ அரசன் யானே கள்வன் என்று பாண்டியன்;; நெடுஞ்செழியன் சொன்னது போல சொல்லி, செங்கோலை முறித்துக் கொள்வார் என்றா நினைத்துக் கொண்டீர் மல்லிகார்ஜுன கார்கே! போங்கள் மல்லிகார்ஜுன கார்கே ; ஒங்களோட ஒரே பகடி மல்லிகார்ஜுன கார்கே. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,894. 13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பணமதிப்பு நீக்கத்தால் செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 ரூபாய்தாள்கள் 99.3 விழுக்காடு வங்கிக்குத் திரும்பிவந்து விட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதால், தண்டனைக்குப் பிரதமர் மோடி தயாராக இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நினைவு படுத்தியுள்ளார். தலைமை அமைச்சர் மோடி நாடாளுமன்றத்தில் கறுப்புப்பணம், கள்ளநோட்டு, தீவிரவாதத்தை ஒழிக்க பணமதிப்பு நீக்கத்தை கொண்டு வந்துள்ளோம் என்று பேசினார். நான் ஏதேனும் தவறு செய்தால் என்னைத் தண்டியுங்கள் என்று பணமதிப்பு நீக்கத்துக்குப் பின் மோடி பேசினாரே அது குறித்து நிருபர்கள் கார்கேயிடம் கேட்டனர். அதற்கு கார்கே கூறுகையில், நான் மோடியிடம், பணமதிப்பு நீக்கத்துக்குப் பின், நீங்கள் கூறியது நடக்காவிட்டால், பணமதிப்பு நீக்கம் தவறாக அமைந்தால் உங்களை எங்கு வைத்துத் தண்டிப்பது என்று கேட்டேன். இப்போது தவறாக அமைந்துவிட்டது. தலைமை அமைச்சர் மோடியே டெல்லியில் உள்ள விஜய் சவுக் பகுதியில் தண்டிக்கலாமா அல்லது வேறு எங்குமா? இதைப் தலைமை அமைச்சருக்கு நினைவு படுத்திவிடுகிறேன். ஆதலால், மோடி தண்டனைக்கு தயாராக இருப்பார் என நினைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். பாவம் மல்லிகார்ஜுன கார்கே நீங்கள்! வங்கி கணக்கில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும், 15 இலட்சம் போடுவோம் என்று கூறிய பாஜகவினர் தற்போது அப்படியெல்லாம் சொல்ல வில்லை என்று மாற்றிக் கொள்ள வில்லையா? 'நான் ஏதேனும் தவறு செய்தால் என்னைத் தண்டியுங்கள்' என்று சொல்லவேயில்லை என்று நூறு கோயில்களில் சத்தியம் செய்வார் மோடி. கண்ணகி வழக்குரைத்ததும், யானோ அரசன் யானே கள்வன் என்று பாண்டியன்;; நெடுஞ்செழியன் சொன்னது போல சொல்லி, செங்கோலை முறித்துக் கொள்வார் என்றா நினைத்துக் கொண்டீர் மல்லிகார்ஜுன கார்கே! போங்கள் மல்லிகார்ஜுன கார்கே ; ஒங்களோட ஒரே பகடி மல்லிகார்ஜுன கார்கே. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,894.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



