பாஜகவிற்கு வலுவான எதிர்நிலைப்பாடு உள்ள தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். அசாம் மாநிலத்தில் 3 கட்டமாக தேர்தல் நடைபெறும், மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 14,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். டெல்லியில் நிருபர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார் அதன் முதன்மை அம்சங்கள் வருமாறு:- விழாக்கள் மற்றும் மாநிலங்களில் நடைபெறும் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் கவனத்தில் கொள்ளப்பட்டு தேர்தல் அட்டவணை தயாரிக்கப் பட்டதாதத் தெரிவிக்க்படுகிறது. அனைத்து வாக்கு சாவடிகளும் சானிட்டைசர், குடிநீர் உள்ளிட்டவை இருப்பது உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும். மார்ச் 27 முதல் கட்டத் தேர்தல். ஏப்ரல் 1 இரண்டாம் கட்டத் தேர்தல். 6 மூன்றாம் கட்டத் தேர்தல். வாக்கு எண்ணிக்கை மே 2ல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளன. முதல் கட்டத் தேர்தல் மார்ச் 27. இரண்டாவது கட்டத் தேர்தல் ஏப்ரல் 1. மூன்றாவது கட்டத் தேர்தல் ஏப்ரல் 6. நான்காவது கட்டத் தேர்தல் ஏப்ரல் 10. ஐந்தாவது கட்டத் தேர்தல் ஏப்ரல் 17. ஆறாவது கட்டத் தேர்தல் ஏப்ரல் 22. ஏழாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 26. எட்டாவது மற்றும் இறுதிக்கட்டத் தேர்தல் ஏப்ரல் 29. நடைபெற உள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6ல் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும். தமிழகத்தில், தொடர்புடைய செய்திகள்:
வேட்புமனு பதிகை: 10-03-21
வேட்புமனு பதிகை நிறைவு: 19-03-21
வேட்புமனு பரிசீலனை: 20-03-21
வேட்புமனுவை திருமப பெற கடைசி நாள்: 22-03-21
தேர்தல் நாள்: 06-04-21
வாக்கு எண்ணிக்கை: 02-05-21
1.தேர்தல் பணிகளில் ஈடுபடும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்
2.வேட்பாளருடன் சேர்த்து 5 பேர் மட்டுமே வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க அனுமதி
3.தமிழகம் உள்பட இந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தல் இன்று மாலை அறிவிக்கப்பட்டது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.