Show all

அதிமுக கூட்டணியில் இணைகிறது பாமக! வேகவேகமாக ஒரு சிறுவெற்றியை வன்னிய மக்களுக்கு உரித்தாக்கி

வேகவேகமாக ஒரு சிறுவெற்றியை வன்னிய மக்களுக்கு உரித்தாக்கி, 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது பாமக. 

16,மாசி,தமிழ்த்தொடராண்டு-5122: சட்டமன்றத் தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையாவதற்கு முன்பாகவே, வேகவேகமாக ஒரு சிறுவெற்றியை வன்னிய மக்களுக்கு உரித்தாக்கிட அதிமுகவை நிர்பந்தித்து, ஒன்றிய பாஜகவும் ஆதரவளித்த நிலையில் ஆளுநர் கையெழுத்தும் ஆகி வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு சட்டமுன்வரைவை நிறைவேற்ற வைத்திருக்கிறது பாமக.  
 
இந்தப் பரபரப்பான சூழ்நிலையில் தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வெளியாகி திமுகவும், அதிமுகவும் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடலைத் தொடங்கியிருக்கின்றன. இவற்றில் அதிமுக, பாமக கூட்டணி குறித்து முடிவுகள் எட்டப்பட்டு பாமகவிற்கு 23 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது பாமக. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.