கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஏறத்தாழ முழுக்க வெளியாகிவிட்டன. ஆளும் கம்யுனிஸ்ட் கட்சியின் கூட்டணி அதிக இடங்களில் வாகை சூடியுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி எதிர்பார்த்திராத தோல்வியைத் தழுவியுள்ளன. 02,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஏறத்தாழ முழுக்க வெளியாகிவிட்டன. ஆளும் கம்யுனிஸ்ட் கட்சியின் கூட்டணி அதிக இடங்களில் வாகை சூடியுள்ளது. காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி எதிர்பார்த்திராத தோல்வியைத் தழுவியுள்ளன. 941 கிராம பஞ்சாயத்துகளில் 514 இடங்களிலும், 6 மாநகராட்சிகளில் 5 இடங்களிலும், 14 மாவட்ட பஞ்சாயத்துகளில் 11 இடங்களிலும் கம்யூனிஸ்ட் கூட்டணி வெற்றி அல்லது முன்னிலை வகிக்கிறது என்பதை முதல்வர் பினராயி விஜயன் தனது பேட்டியில், உறுதி செய்தார். இதை மக்களின் வெற்றி என்று வர்ணித்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பினராயி விஜயன் ஆட்சிக்கு வந்ததிலிருந்து கடினமான காலகட்டங்களில் ஒன்றைக் கடந்து வந்த இந்த நேரத்தில், மாபெரும் வெற்றி அதற்கு கிடைத்துள்ளது. தங்கக் கடத்தல் வழக்கை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். முதலமைச்சரின் முன்னாள் முதன்மை செயலாளர் எம்.சிவசங்கர். இவர் ஒரு மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரி. ஆனால், தங்கக் கடத்தல் வழக்கில் பல்வேறு ஒன்றிய பாஜகவுக்கு கட்டுப்பட்ட நிறுவனங்களால் விசாரிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். ஆனால் மக்கள் ஆளும் கம்யூனிஸ்டுக்கே ஓட்டுப் போட்டுள்ளனர். ஒன்றிய பாஜக அரசின் கெடுபிடிகளுக்கு எதிர்நிலை, கோவிட் -19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் இலவச குடும்பப் பொருள்கள் உள்ளிட்ட அதன் நலத்திட்டங்களுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்று சொல்ல முடியும். ஒன்றிய பாஜக அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட விசாரணை அமைப்புகள், ஆளும் மாநில அரசியல்வாதிகளைக் குறிவைத்து, நலத்திட்டங்களை முடக்க முயற்சிக்கிறது என்ற அனுதாப அலை வாக்குகளை ஈர்க்க உதவியது என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள். பாஜகவுக்கு எதிரான சிறுபான்மை ஒருங்கிணைப்பும் அதற்கு பெரிய அளவில் உதவியுள்ளது. ஹிந்துத்துவா அரசியலை பாஜக முன்னெடுத்ததால், இயல்பாகவே, முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஓரணியில் திரண்டுள்ளனர். காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டுப் போட்டு ஓட்டு சிதறுவதைவிட மொத்தமாக ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு ஓட்டுப் போடலாம் என்பது அவர்கள் முடிவாகியுள்ளது. எனவேதான், காங்கிரஸ் வலுவான இடங்களில் கூட இந்த முறை, பினராயி கூட்டணியினர் வென்றுள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



