கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜக நாட்டின் தொழில் வணிக பொருளாதார மேம்பாட்டிற்கோ, இந்திய மக்களின் நல்வாழ்விற்கோ திட்டமிட்டது, செயல்படுத்தியது என்று எதுவுமேயில்லை. மாநில உரிமைகளுக்கு அடித்த ஆப்புகளைத்தவிர. 23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கடந்த ஐந்து ஆண்டுகளில் பாஜக நாட்டின் தொழில் வணிக பொருளாதார மேம்பாட்டிற்கோ, இந்திய மக்களின் நல்வாழ்விற்கோ திட்டமிட்டது, செயல்படுத்தியது என்று எதுவுமேயில்லை. போனமுறை ஐந்து ஆண்டு ஆட்சிகாலத்தில் பாஜக திட்டமிட்டது செயல்படுத்தியது எல்லாம் மாநில உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்துக் கொள்வது எப்படி என்பதற்கும், பறித்துக் கொண்டவைகளுக்குமானவைகள்தாம். நடுவண் பாஜக அரசின், இந்த மாநில உரிமை பறிப்பு அதிகாரப்பாடுகளில், தமிழக மக்களுக்கு உடன்பாடு இல்லை. மற்ற மற்ற மாநில மக்கள் பாஜகவின் இந்த வேதாந்தத்தை விரும்பி ஏற்றுக் கொள்கிறார்களா புரியவில்லை. உண்மையிலேயே அவர்கள் மனம்விரும்பி வாக்களித்தே பாஜக இந்த முறை ஆட்சியைப் பிடித்ததா தெரியவேயில்லை. தேர்தல் ஆணையத்திற்கே வெளிச்சம். தற்போதைய மின் கட்டண நிர்ணய முறையில் வணிக மின் நுகர்வோர்களும் தொழிற்சாலை மின் நுகர்வோர்களும் சற்றுக் கூடுதல் கட்டணமும், இதர நுகர்வோர்கள் சற்றுக் குறைவான மின் கட்டணமும் பெறுகிறார்கள். இம்முறையை மாற்றும் வகையில், இடை மானியத் தொகையை முழுமையாக நீக்கி, ஒரே மாதிரியான மின் கட்டணம் இனி நிர்ணயிக்கப்படும். இது நடைமுறைப்படுத்தப்பட்டால், வீடுகளில் தற்போது செலுத்திவரும் மின் கட்டணத்தைப் போல இரண்டு மடங்கு மின் கட்டணமாகச் செலுத்தும் நிலை ஏற்படும். குடிசைகள், வீடுகளுக்குத் தற்போது தமிழக அரசால் இலவச மின்சாரத்துக்கென மானியத் தொகை வழங்கப்படுகிறது. தற்போதைய சட்டத் திருத்தத்தால், மாநில அரசானது மானியத்தை மின்சார வாரியத்துக்குச் செலுத்தாமல், மின் நுகர்வோர்களுக்கு நேரடியாக வழங்க வேண்டும். இது நடைமுறைக்கு வந்தால், தற்போது இலவச மின்சாரம் பெற்றுவரும் வீடுகள், கைத்தறி மின் நுகர்வோர்கள் அனைவரும் கட்டாயம் மின் கட்டணம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் சுமார் 23 லட்சம் வேளாண் மின் இணைப்புகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுவருகிறது. ஏற்கெனவே, மாநில அரசுகளால் வலுவாகக் கட்டமைக்கப்பட்டுள்ள மின் விநியோகத்தைப் பயன்படுத்தி, தனியார் நிறுவனங்கள் லாபம் ஈட்டும் வகையிலேயே இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. நிதி ஆயோக், தேசிய கல்விக் கொள்கை, உதய் மின் திட்டம், அணைகள் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் தொடர்ச்சியாகவே தற்போது மின்சாரச் சட்டத் திருத்தமும் அமைந்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் பொதுப் பட்டியலிலுள்ள கல்வி, வேளாண்மை, மின்சாரம், வனம், நீதி நிர்வாகம் என ஒவ்வொரு துறையாக மாநில அரசுகளின் உரிமையை மத்திய அரசு பறித்துக்கொள்வது சரியானதுதானா? பாஜகவின் இந்த வேதாந்தம் மற்ற மற்ற மாநில மக்களுக்கு உடன்பாடுதானா? மாநிலக்கட்சிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் தங்களுக்குள் இரண்டுபட்டு அடித்துக் கொண்டிருக்காமல், மாநில உரிமைகளைக் காக்க பாஜகவை விரட்டியடிக்க வேண்டும். அதற்கு முதலில் இயந்திரங்கள் மூலமான வாக்குப் பதிவை விரட்டியடித்தாக வேண்டும். தமிழகத்தில் ஒரேயொரு தொகுதியில் மட்டும் வாகனங்களில், தனியார் கிடங்குகளில், வாக்கு இயந்திரங்கள், காணக்கிடைக்கப் பட்டது எப்படி? என்ற கேள்விக்கு விடையும் யாரும் தரவில்லை. விடை தேடவும் யாரும் முயலவில்லை.
கரோனா தொற்றிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள உலக நாடுகள் போராடிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், நடுவண் பாஜக அரசு அவசர அவசரமாக மின்சாரச் சட்டத் திருத்த முன்வரைவை அரங்கேற்றியுள்ளது. ஏற்கெனவே, மின் உற்பத்தியில் கிட்டத்தட்ட 50விழுக்காடு மின் உற்பத்தி தனியார் வசம் சென்றுவிட்டது. மாநில அரசுகளுக்குச் சொந்தமான மின் வாரியங்கள் மின் உற்பத்தியிலிருந்து விலகியிருக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டு, இந்தியா முழுவதும் 34 தனியார் அனல் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை தொடர்ந்து செயல்படவில்லை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



