02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியதும் அண்மையில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவி ஏற்று கொண்டனர். பின்பு நடுவண் அரசுக்கு எதிராக காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிராதித்யா சிந்தியா நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது நம்பிக்கையில்லா தீர்மானம் மீது பேரவைத் தலைவர் முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில் மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் மீது வெள்ளியன்று மக்களவையில் விவாதம் என தகவல் வெளியாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிறகு வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,852.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



