மோடி வாழ்க்கையை மையமாக வைத்து 'பி.எம்.நரேந்திரமோடி' என்ற பெயரில் புதிய படம் தயாராகியது. ஏராளமான வழக்குகள், ஏராளமான எதிர்ப்புகளை யெல்லாம் தாண்டி, இதன் வெளியீடு நாளை என்றிருந்த நிலையில்- தயாரிப்பாளர் அடித்தார் ஆப்பு! நாளை வெளியீடு இல்லையாம். 21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த ஐந்து ஆண்டுகளாக: 1.நள்ளிரவில் மக்கள் அதிகாரமான பணத்தை மதிபழித்து பணம் வழங்கும் இயந்திரத்திலும், வங்கியிலும் காத்திருந்து பலர் மரணம். அஞ்சறைப் பெட்டியில் தமிழ்ப் பெண்கள் வைத்திருந்த பணம் வெளியேற்றம். 2.நள்ளிரவில் சரக்கு-சேவைவரி விதிப்பு பல தொழில்கள் நாசம் 3.கைதி எண் போல ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் எண் நிர்பந்தம் 4.அம்பானி மகனுக்கு ஜியோ அலை கற்றை வரிசை, இராணுவ விமானப் பாதுகாப்பு, தொடங்காத பல்கலைகழகத்திற்கு விருது. 5.தமிழர் வரிப்பணத்தில் மருத்துவக் கல்லூரிகளுக்கு தமிழ் மாணவர்களுக்கு நீட் தடை. 6.விளை நிலங்களில் மீத்தேன் 7.ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடிய 13 பேர்களை காவல்துறையை ஏவி கொன்றொழித்த எடப்பாடி-பன்னீர் அரசுக்கு பாதுகாப்பு 8.மாடுகளைப் பாதுகாக்க மனிதர்கள் வெட்டி சாய்ப்பு 9.எழுத்தாளர்கள் கொலை இப்படி கொடுங்கோல் ஆட்சி செய்து விட்டு இப்போது மீண்டும் தலைமை அமைச்சராக வேண்டும் இந்தியாவிற்கு என்று துடித்துக் கொண்டிருக்கிறார் மோடி. மோடி வாழ்க்கையை மையமாக வைத்து 'பி.எம்.நரேந்திரமோடி' என்ற பெயரில் புதிய படம் தயாராகியது. இந்தப் படத்தில் மோடி கதாபாத்திரத்தில் நடிகர் விவேக் ஓபராய் நடித்துள்ளார். இந்த படம் நாளை திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 23 மொழிகளில் தயாராகியுள்ள இந்தத் திரைப்படம் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி பா.ஜனதாவுக்கு சாதகமாக அமையும் என்று நம்புகிறார் மோடி. அப்படி எதனை, மக்கள் பாதிக்கப் பட்ட நடைமுறை அவலங்களைத் தாண்டி மோடிக்கு ஆதரவாக சொல்லிவிட முடியும் என்று தெரியவில்லை. இந்தப் படத்தை தேர்தல் நேரத்தில் வெளியிட அனுமதிக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள் மனு அளித்தன. அதுமட்டுமின்றி, ஓய்வு பெற்ற 47 ஆட்சிபணித்துறை அதிகாரிகளும் இந்தப் படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பினர். அதில் 'தேர்தலுக்கான நாள் அறிவிக்கப்பட்ட பின்னர் இந்தப் படத்தை வெளியிட அனுமதிப்பது தேர்தல் விதிமீறல் ஆகும்' என்று கூறியுள்ளனர். இதே கோரிக்கையை முன்வைத்து டெல்லி, மும்பை உயர்அறங்கூற்றுமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடியாகின. இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது மும்பை உயர்அறங்கூற்றுமன்றத்தில் தேர்தல் ஆணையம் சார்பில் அணியமான வழக்கறிஞர், ஒரு படத்தை எப்போது வெளியிடுவது என்பது தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் மும்பையில் உள்ள திரைப்படத் தணிக்கை குழுவினருக்குதான் உண்டு. இதில் நாங்கள் தலையிடுவதற்கு எதுவுமில்லை என்று தெரிவித்தார். இதற்கிடையே, ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு 'பி.எம்.நரேந்திர மோடி' திரைப்படம் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், மோடியின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என அதன் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கீச்சுப் பதிவில், பிஎம் நரேந்திர மோடி திரைப்படம் நாளை வெளியாகாது. விரைவில் அதுபற்றிய அறிவிப்பு வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். நரி வலமாய் போனால் என்ன? இடமாய் போனால் என்ன? மோடி பதவி இழக்கப் போவது சிலப்பதிகாரத்தில் இளங்கோ சொல்லி யிருக்கும்: அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாவதூ உம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூ ஊம் என்ற கோட்பாட்டின் படி நடந்தே தீரும்! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,112.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.