கைகளைத் தூய்மைப்படுத்த உதவும் சேனிட்டைசர்களில் எரிசாரயம் 60 விழுக்காட்டிற்கு மேல் இருப்பதால், எளிதில் தீப்பற்றக் கூடிய ஆபத்து இருப்பதால், நாளை இரவு 9மணிக்கு விளக்கு ஏற்றும் போது கவனமாக இருக்க இந்திய இராணுவம் அறிவுரை வழங்கியுள்ளது. 22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாளை இரவு 9 மணிக்கு வீடுகளில் எரியும் அனைத்து மின் விளக்குகளையும் அணைத்துவிட்டு, 9 நிமிடங்களுக்கு ஒளியேற்றப்பட்ட மெழுகுவர்த்தி, அகல் விளக்கு, மின்கல விளக்கு அல்லது உங்கள் செல்பேசி ஒளியை ஏற்ற இந்தியத்தலைமைஅமைச்சர் மோடி அறுவுறுத்தினார். இதுபற்றி இந்திய இராணுவம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது:- கைகளை தூய்மைப்படுத்த உதவும் சேனிட்டைசர்களில் எரிசாரயம் 60 விழுக்காட்டிற்கு மேல் இருப்பதால், எளிதில் தீப்பற்றக் கூடிய ஆபத்து இருப்பதால், இந்த அறிவுரையை இந்திய ராணுவம் வழங்கியுள்ளது. கடந்த முறை மோடி கைதட்டவும், மணி அடிக்கவும் சொன்ன போது, வடஇந்திய மோடி கொண்டாடிகள் கூட்டம் சேர்ந்து மணி அடிக்கத் தொடங்கி சுயஊரடங்கு நோக்கத்திற்கே எதிராகிப் போனார்கள் என்பது குறிப்படத்தக்கது.
நாளை இரவு விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏற்றும் முன்பு பொதுமக்கள் மிக கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் ஆல்கஹால் கலந்த சேனிட்டைசர்களை கொண்டு கைகளை தூய்மைப்படுத்துவதற்கு பதில் சோப்புகளை கொண்டு கை கழுவுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



