Show all

நடுத்தர மக்கள் பாடுதாம் திண்டாட்டமாகும்! கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு மேலும் தொடருமேயானால்

நடுவண் அரசு ஏப்ரல் 15க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்படத்தக்கது. ஆனால் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்ற பீதி மக்களிடையே தெற்றிக் கொண்டுள்ளது.

22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 2,547லிருந்து 2,902ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 62 லிருந்து 68 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 163 லிருந்து 184 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரா- 423, தமிழகம்- 411, டெல்லி- 386, கேரளா- 295, ராஜஸ்தான்- 179, உத்தரப்பிரதேசம்- 174, ஆந்திரா- 161, தெலங்கானா- 158, கர்நாடகா- 128, மத்திய பிரதேசம்- 104 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை நடுவண் நலங்கு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதனையடுத்து அமெரிக்காவில் பாஸ்டன் என்ற ஆய்வு நிறுவனம் இந்தியாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு சூன் மாத இறுதி வரை அல்லது செப்டம்பர் இரண்டு கிழமை வரை நீட்டிக்கப்படலாம் எனத் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும்  இந்தியாவில் சூன் மாதம் இறுதியில் தான் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடுவண் அரசு ஏப்ரல் 15க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்படத்தக்கது. ஆனால் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்ற பீதி மக்களிடையே தெற்றிக் கொண்டுள்ளது.

இந்தியாவில் வடமாநிலங்களைப் பொருத்தவரை பெரும்பாலான அரசு நிறுவனங்;களைக் கொண்டுள்ளன. மற்றும் கார்ப்பரேட்டுகள் எனப்படும் பெரும் பணக்காரர்களும் வட மாநிலங்களில் அதிகமாக உள்ளனர். தலைநகரமும் வடக்கே இருக்கிற நிலையில் மிகப்பெரும் நிறுவனங்களும், அரசு தொடர்புடைய நிறுவனங்களும், வங்கி, காப்பீடு, அலைக்கற்றை, பங்குச்சந்தை சார்ந்த தலைமை நிறுவனங்களும், ‘தலைநகருக்கு அண்;மை நடைமுறையில்’ வட மாநிலங்களிலேயே அமைந்து விட்டன.

இதற்கான அடிப்படை காரணம் இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து வடமாநில அரசியல்வாதிகளே நடுவண் அரசு ஆட்சிக்கும், தேசிய அரசியலுக்கும் முனைவது முதன்மைக் காரணமாகும். வட இந்திய அரசியல்வாதிகள் எந்தக் கட்சியில் இருந்த போதும் கார்ப்பரேட்டுகளாகவும், மிகப்பெரிய செல்வந்தர்களாகவும் இருக்கின்றார்கள். வட இந்தியாவில் இவர்கள் ஏறத்தாழ 35 விழுக்காட்டினர் என்றால் மீதம் 65விழுக்காட்டினர் பரம ஏழைகள். படிப்பு இல்லாதவர்கள். ஹிந்தி மொழியும், ஹிந்தி சாயலில் அமைந்த வடமாநிலமொழிகள் மட்டுமே அறிந்தவர்கள். வட இந்திய அரசியல்வாதிகள், அந்தப் பாமரர்கள் ஆங்கிலமோ வேறு மொழிகளோ கற்று விடக் கூடாது என்பதற்காக இந்தியாவின் அனைத்து மாநிலத்தின் மீதும் திட்டமிட்டு ஹிந்தியை திணித்து வருகின்றார்கள்.  

நடுவண் பாஜக அரசு உச்சபட்சமாக வடக்கிலிருந்து புலம் பெயர்ந்து நாடு முழுவதும் கூலிவேலை செய்து வரும் தொழிலாளர்களுக்காகவே ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத்’ திட்டத்தை முன்னெடுத்தது. கொரானா பாதிப்பு வந்த நிலையில் அந்தத் திட்டம் தற்போது தமிழகத்தில் கைவிடப்பட்டிருக்கிறது.

ஆக வடமாநிலங்களில் இரண்டு வகையான மக்கள்:- 35விழுக்காட்டினர் பணத்திற்கு பஞ்சம் இல்லாதவர்கள். 65விழுக்காட்டினர் பரம ஏழைகள்.
ஆனால் தென்னக மாநிலங்கள் அதுவும் குறிப்பாக தமிழகம் வேறு வகையானது. தமிழகத்தில் பணத்திற்கு பஞ்சம் இல்லாத அரசுஅதிகாரிகள், அரசியல்வாதிகள், பெருநிறுவனங்கள் என்பன வெறுமனே ஐந்து விழுக்காட்டினரே. இந்தப் பரம ஏழைகள் பட்டியலில் இடம் பெறுபவர்கள் 15 விழுக்காட்டினர் மட்டுமே இருப்பார்கள். ஆனால் இந்த இருவருக்கும் இடைப்பட்ட நடுத்தர மக்கள் என்கிற இனம் தமிழகத்தில் எண்பது விழுக்காட்டினை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. 

இந்த இனத்தினருக்கு அன்றாடம் தொழில் நடந்தேயாக வேண்டும். ஒரு சிறிய இயற்கை சீற்றத்தால் கூட கடன்காரர்களாகி திரும்ப கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவார்கள். இவர்கள் சட்டத்தின் அனைத்து சலுகைகளையும் கவனமாக கையாள்பவர்கள். சட்டத்தில் சிறுமாற்றம் வந்தாலும் கூட பாதிக்கப்பட்டு விடுவார்கள். நெகிழி பைகள் தடையென்றால் நிறைய பேர்கள் பாதிப்பார்கள். ஒரு நாள் கதவடைப்பு என்றால் பாதிப்பார்கள். மோடியின் பணமதிப்பு இழப்பால் பாதித்தவர்கள் இன்னும் கூட பலர் மீண்டுவர முடியாமல் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் கொரோனா ஊரடங்கை ஒட்டுமொத்த நாடும் எதிர் கொண்டிருக்கிறது. வடமாநிலங்களில் புலம்பெயர்ந்து தொழில் செய்து வந்தவர்கள் ஒருவழியாக நடந்தே சொந்த ஊரை அடைந்து விட்டார்கள் அவர்களின் தேவை உணவுத்தேவை மட்டுந்தாம். அவர்கள் பலமாதங்கள் ஊரடங்கு நடந்தாலும் சமாளிப்பார்கள். இவர்கள் 35விழுக்காட்டினர். மீதம் உள்ள 65விழுக்காட்டினர் பலஆண்டுகள் ஊரடங்கு முன்னெடுக்கப்பட்டாலும் சமாளிப்பார்கள். 

ஏப்ரல் 14க்குப் பிறகு ஊரடங்கு தொடருமானால் தென் மாநில மக்கள் நிறைய பாதிப்பார்கள். அதுவும் தமிழகத்தின் பாதிப்பு சொல்லி மாளாது. இவர்களுக்கு அம்மா உணவகத்தில் உணவு, வீட்டுக்கு வீடு உணவு போன்ற திட்டங்கள் எல்லாம் பயன்தராது. மிகவும் கூச்சப்படுவார்கள். அவர்களுக்கு ஓரளவிற்காக தீர்வு வழங்க வேண்டும் என்று நினைத்தால் மாதம் ஐந்தாயிரம் மட்டுமாவது குடும்ப அட்டைக்கு வழங்கினால் மட்டுமே சாத்தியமாகும். ஊரடங்கு தொடரும் முடிவு தமிகத்திற்கு மிக மிக ஆபத்தானது என்பதை மாநில, நடுவண் அரசுகள் புரிந்து கொண்டு உரிய நிவாரணங்களோடு ஊரடங்கைத் தொடரலாம். முடிந்தவரை ஊரடங்கை தொடராமல் இருப்பதற்கான வழிவகைகளை கண்டுபிடித்து செயல்படுத்துவதே தமிழகத்திற்கு சிறப்பு.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.