அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு இன்றைய இரவு விருந்து குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறுவதை முன்னிட்டு, குடியரசுத்தலைவர் மாளிகைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்தார். ஜனாதிபதி மாளிகைக்கு வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரவேற்றார். 13,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். முதலாவதாக அகமதாபாத்தில் நடைபெற்ற வணக்கம் டிரம்ப் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார். சபர்மதி காந்தி ஆசிரமம், தாஜ்மகால் ஆகிய இடங்களைப் பார்வையிட்ட அமெரிக்க அதிபர் இன்று இந்திய தலைமைஅமைச்சர் மோடியுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு இன்றைய இரவு விருந்து குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறுவதை முன்னிட்டு, குடியரசுத்தலைவர் மாளிகைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்தார். ஜனாதிபதி மாளிகைக்கு வந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா ஆகியோரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரவேற்றார். அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அளிக்கப்படும் விருந்தில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, தலைமைஅமைச்சர் மோடி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், மக்களவைத்தலைவர் ஓம்.பிர்லா மற்றும் நடுவண் அமைச்சர்கள், கர்நாடக முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, தெலுங்கான முதல்வர் கே.எஸ்.சந்திரசேகர ராவ், அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால். அரியான முதல்வர் மனோகர் லால் கட்டர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். விருந்து முடிந்த பின்னர், மோடி டிரம்பை கட்டியணைத்து, கைகொடுத்து இன்முகத்துடன் வழி அனுப்பி வைத்தார். அதன் பின்னர் தனி விமானம்மூலம் டெல்லியில் இருந்து டிரம்ப் அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



