26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சம்ஷாபாத்தில் நடைபெற்ற ராகுல் காந்தி பொதுக்கூட்டத்தில் விஜயசாந்தி சக்தி வாய்ந்த பேச்சு! என்பதான காணொளி மிகுதியாகப் பார்க்கப் பட்டும், விரும்பப் பட்டும் வருகிறது. 'எந்த நிமிடத்தில் எந்த குண்டை மோடி போடப் போகிறார் என்று அனைவரும் அச்சத்தில் உள்ளனர். மோடி பயங்கரவாதி போல தோற்றமளிக்கிறார். தனது மக்களை நேசிப்பதற்கு பதிலாக, அனைவரையும் அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறார். பிரதமருக்கான பண்புகள் இது இல்லை' என்று விஜய்சாந்தி பொத்தாம் பெதுவாக பேசிவிட்டுச் சென்ற நிலையில், ஒவ்வொரு சார்பு ஊடகங்களும் தங்கள் சார்புக்கேற்ப பொருள் விளக்கம் வழங்கி பிசுறு கிளப்பிக் கொண்டிருக்கின்றன. ராகுல் மோடிக்கு எதிராக பேசுவதை மட்டுமே, எந்த சார்பு ஊடகங்கள் கூட அதற்கு அவருக்கு மட்டுமே உரிமையுள்ளதைப் போல, கண்டு கொள்வதும் இல்லை ; ஒளிபாய்ச்சுவதும் இல்லை. இந்த நிலையில் விஜய்சாந்தியின் பேச்சை அச்சத்தோடு பார்க்கின்றன பெரும்பாலான வெகுமக்கள் ஊடகங்கள். இணைய ஆர்வலர்களும், இராகுல் காந்தி மட்டுமே மோடிக்கு எதிராக துணிச்சலாகக் கருத்துப் பரப்புதல் செய்து வருகின்றனர். முதல்முறையாக விஜய்சாந்தி மோடிக்கு எதிராக அவரை விமரிசித்தது வேறுபாடாகப் பார்க்கப் படுகிறது. விஜயசாந்தி மீது காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எதுவும் எடுக்குமா? என்றெல்லாம் சில சார்பு இதழ்கள் கேள்வியை முன் வைக்கின்றன. சம்ஷாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விஜயசாந்தி மேலும் கூறுகையில், 'வரவிருக்கின்ற பாராளுமன்ற தேர்தல் இந்தியத் தலைமைஅமைச்சர் மோடி மற்றும் ராகுல் காந்திக்கு இடையே நடைபெறும் யுத்தம் ஆகும். ஜனநாயகம் வாழ்வதற்காக ராகுல் காந்தி போராடுகிறார். சர்வாதிகாரி போல மோடி ஆட்சி செய்கிறார். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, புல்வாமா தாக்குதல் என மோடி மக்களை அச்சுறுத்தி கொண்டிருக்கிறார்.' என்றார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,087.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.