Show all

'கைவிளக்கு ஏந்திய கமல்' என இனி தொண்டர்கள் கொண்டாடுவார்கள்! தேர்தல் ஆணையம் வழங்கியது கைவிளக்கு சின்னம் கமலுக்கு

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில் இருந்த ஆங்கிலேயப்படையின் நிலை 162 ஆண்டுகளுக்கு முன்பு படுமோசமாக இருந்தது. ஆயிரம் சிப்பாய்களில் 

69 பேர், நோயால் இறந்துவிடுவார்கள். யுத்தத்துக்குப் போகாமலே இப்படி நிறையப் பேர் இறக்கும் நிலை இருந்தது. இதை சரி செய்ய, ஒரு விசாரணைக் குழு அமைத்தார்கள். அந்தக் குழு சார்பில், பிளாரன்ஸ் இந்தியா முழுவதும் இருக்கும் ராணுவ முகாம்கள், ராணுவ மருத்துவமனைகளின் நிலைபற்றி தகவல்களை திரட்டினார். அந்தத் தகவல்கள்: முகாம்களில் நல்ல குடி நீர் கிடையாதாம். சாக்கடை, கழிவறைகள் கிடையாது. ஒவ்வொரு ராணுவ முகாமும் நோய்க் கிடங்காக இருந்தது என்றால், அதை அடுத்திருந்த நகரத்தில், பொது மக்களின் நிலை இன்னும் மோசமாக இருந்தது. அங்கேயும் குடி நீர், சாக்கடை கழிவறைகள் இல்லை.

இதையெல்லாம் ஆராய்ந்த பிளாரன்ஸ், பொது சுகாதாரத்தை சரிப்படுத்தினால்தான், தொற்று நோய்களைக் குறைக்க முடியும் என்று சொன்னார். அவருடைய பல யோசனைகள் ஏற்கப்பட்டன. அடுத்தடுத்து, ஆறு வைஸ்ராய்களுடன் தொடர்ந்து பிளாரன்ஸ் தொடர்பில் இருந்தார். பொது சுகாதாரத்தை மேம்படுத்த, யோசனைகள் சொல்லிக் கொண்டே இருந்தார். அப்போதே அவருக்கு 70 அகவை ஆகிவிட்டது. அந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தான் கைவிளக்கு ஏந்திய காரிகை என்ற பெயருக்கும் பெருமைக்கும் உரியவர்.

தற்போது இந்தியத் தேர்தல் ஆணையம் கை விளக்கு ஏந்திய கமலை பாராளுமனறத் தேர்தலில் போட்டியிட அனுமதித்திருக்கிறது. ஆம் கமலின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு கைவிளக்கு சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருக்கிறது.

மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் தனியாக போட்டியிடும் என்று அதன் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து இருக்கிறார். இதற்காக அவர் வேட்பாளர்களை தேர்வு செய்து வருகிறார். வேட்பாளர் நேர்காணல் தற்போது மக்கள் நீதி மையம் சார்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, கைவிளக்கு சின்னம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வருகிறது. கருப்பு வெள்ளையில் இருக்கும் கைவிளக்கு சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்த சின்னத்தில் கீழ்தான் மநீம போட்டியிடும் என்பது குறிப்பிடத்தக்கது. கமலுக்கு நல்ல சின்னம் கிடைத்திருப்பதாக தொணடர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

  -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,087.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.