Show all

கொரோனாவிலிருந்தும் இந்தியாவுக்கு விடுதலை! இந்திய விடுதலை நாளில். நடைமுறைக்கு வருகிறது கொரோனா தடுப்பு மருந்து

இந்திய விடுதலை நாள் அன்று கொரோனா தடுப்பு மருந்து கோவாக்சின் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளதாக, இந்திய மருத்துவ மற்றும் ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.

19,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தியாவில் கொரோனா அதிகளவு பரவி வரும் நிலையில், அதற்கான தடுப்பு மருந்தை நடுவண் அரசின் பாரத் பயோ டெக் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

கோவாக்சின்- இந்தியா என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த மருந்தை பாரத் பயோடெக், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, இந்திய நுண்ணுயிரியியல் துறையின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டு, இது விலங்குகளுக்குப் பரிசோதனை முறையில் செலுத்தப்பட்டது. இந்த மருந்து நல்ல பலனைத் தருவதாக ஆய்வக முடிவுகள் தெரிவிக்கின்றன. 

அதனைத் தொடர்ந்து மனிதர்களிடம் வருகிற செவ்வாய்க் கிழமை முதல் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கோவாக்சின்- இந்தியா என்கிற கொரோனா மருந்தைச் செலுத்துவதற்கான அனுமதியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திடம் இருந்து பாரத் பயோடெக் நிறுவனம் பெற்றுள்ளது. 

இந்த கொரோனா தடுப்பு மருந்து சோதனையை விரைவு படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது. அதற்கான பணிகளை வருகிற செவ்வாய்க் கிழமைக்குள் விரிவுபடுத்தவும் வலியுறுத்தியுள்ளது. சோதனை வெற்றி அடைந்தால் இந்திய விடுதலை நாளில் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.  இதன் மூலம் இந்திய விடுதலை நாளுக்குள் கொரோனா தடுப்பு மருந்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் முடிவு செய்துள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.