Show all

ஆறு வினாடி அசத்தல் காணொளி! இணையத்தில் தீயாகி வருகிறது

வேட்டை விலங்குகள் மட்டுமே எப்போதும் வெற்றி பெற மாட்டார்கள், என்று குறிப்பிட்டு இந்தக் காணொளியை இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்த் நந்தா இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

19,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: அந்த எருமை மாட்டுக்கும்; சிங்கத்திற்கும் என்ன சிக்கல் என்று தெரியவில்லை. அதையெல்லாம் இந்தக் காணொளியில் காட்சிப் படுத்தவில்லை. 

அந்த சிங்கம் ஒரு எருமை மாட்டிற்கு பின்னால் வந்த ஒளிந்து கொள்கிறது. கோபத்தோடு துரத்தி வந்த அந்த எருமை மாடு சிங்கத்தை தன் கொம்புகளால் இரண்டு முறை தூக்கி வீசுகிறது. 

சிங்கம் வந்து ஒளிந்ததே தெரியாமல் பொறுமையாய் இருந்த எருமை மாடு மிரள மிரள விழிக்கிறது, இன்றைக்கு இந்த எருமை மாட்டுக்கு என்ன வந்தது. ஏன் இத்தனைக் கோபம் என்ற நினைவுகளோடு.

அவ்வளவுதான்! காணொளி முடிந்து விட்டது. இந்திய வனத்துறை அதிகாரி சுஷாந்த் நந்தா வெளியிட்டுள்ள ஒரு கணொளிதான் இது. 

இந்தக் காணொளி குறித்து சுஷாந்த் நந்தா குறிப்பிடுகையில், “உயிருக்காக போராட துணிச்சல் இருக்கும்போது யாரும் பலவீனமானவர்கள் இல்லை. இங்கே காட்டு எருமை சிங்கத்தை அதன் அனைத்து சக்தியையும் கொண்டு தூக்கி வீசி பறக்க விடுகிறது. இதேபோல், இந்திய காட்டு எருமை- புலிகள் மற்றும் சிறுத்தைக்கு எதிராக சில சந்தர்ப்பங்களில் தாக்குதல் நடத்தியிருக்கிறது. வேட்டை விலங்குகள் மட்டுமே எப்போதும் வெற்றி பெற மாட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.