அதிகப்படியான சோதனைகளை மேற்கொள்வதே கொரோனவிற்கு எதிராக அரசின் தற்போதைய உடனடிப் பணியாக இருக்க முடியும். குறைவான சோதனைகளை மேற்கொண்டுவிட்டு எந்தச் சிக்கலும் இல்லை என்று கூறிவிடமுடியாது. செய்யப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கையும் மிக அதிகளவில் அதிகரித்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைவாக வரும்போதே நிம்மதி பெருமூச்சுவிடமுடியும். அரசுகள் இதைக் கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டும். 05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சீனாவில் இருந்து 24,000 கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் (ரேபிட் டெஸ்ட் கிட்) வந்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் முதல்முறையாக சேலம் அரசு மருத்துவமனையில், கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் மூலம் பரிசோதனைத் தொடங்கியுள்ளது. கொரோனா பரிசோதனையை விரைவுபடுத்த சேலம் மாவட்டத்திற்கு 1000 கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் (ரேபிட் டெஸ்ட் கிட்) அளிக்கப்பட்டன. இதன் மூலம் 6 மணி நேரத்துக்குப் பதிலாக அரை மணி நேரத்தில் கொரோனாவைக் கண்டறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் (ரேபிட் டெஸ்ட் கிட்) மூலம் சேலத்தில் முதல்முதலாக நடந்த சோதனையில் 18 பேருக்கும் கரோனா இல்லை என்பது தெரியவந்துள்ளது. 30 நிமிடத்தில் கரோனா பரிசோதனை முடிவுகளை வெளியிட்டது சேலம் அரசு மருத்துவமனை. இதனிடையே நடுவண் அரசிடமிருந்து கொரோனா பரிசோதனைக்காகத் தமிழகத்துக்கு 12,000 கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிளும்; வந்துள்ளன. இந்த வகை கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் (ரேபிட் டெஸ்ட் கிட்) ஒவ்வொரு உள்ளூர் பகுதிகளிலும் உள்ள இரத்தப் பரிசோதனை மையங்களிலும் நூற்றுக் கணக்கில் குறைந்த கட்டணத்தில் கிடைக்கச் செய்தால் போதும். அதன் தொடர்ச்சியாக அனைத்து மருத்துவ மனைகளிலும் நடப்பு கொரோனா சிகிச்சையை வழங்கினால் போதும். மேலும், சமூக இடைவெளி நலங்கு நிபந்தனைகளைப் பேணினால் போதும்; வணிகத்திற்கும் தொழிலுக்கும் ஊறு விளைவிக்கும் ஊரடங்கு பெரியதாகத் தேவையில்லை. கொரோனாவை முற்றாக ஒழிப்பது எளிதாக விடும்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



