அதிகப்படியான சோதனைகளை மேற்கொள்வதே கொரோனவிற்கு எதிராக அரசின் தற்போதைய உடனடிப் பணியாக இருக்க முடியும். குறைவான சோதனைகளை மேற்கொண்டுவிட்டு எந்தச் சிக்கலும் இல்லை என்று கூறிவிடமுடியாது. செய்யப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கையும் மிக அதிகளவில் அதிகரித்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைவாக வரும்போதே நிம்மதி பெருமூச்சுவிடமுடியும். அரசுகள் இதைக் கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டும். 05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனாவிற்கு எதிரான இந்தியா இருவகையான செயல்திட்டங்;களை முன்னெடுத்து வருகிறது. 1.ஊரடங்கு உத்தரவின் மூலம் இதுவரை கொரோனா வராதவர்கள் தங்களை கொரோனாவில் இருந்து தொடர்ந்து அன்னியப்படுத்திக் கொண்டிருத்தலாகும். அதாவது மரபு சார்ந்த நேரடி, தொழில் வணிகத்தை அரசு முடக்கியிருக்கிறது இதனால். மரபு சாராத உலகளவில் முன்னெடுக்கப்பட்டு வரும் பன்முகச்சந்தை முறையைத்தான் (மல்டிலெவல் மார்க்கெட்டிங்) அதாவது ஒருவர் இருவரை அறிமுகம் செய்தல், இருவர் நால்வரை அறிமுகம் செய்தல் இப்படி 8, 16, 32, 64, 128, 254, (ரெப்பரல்முறை) உண்மையில் கொரோனா தன் பரவலுக்குத் தேர்ந்தெடுத்திருக்கிறது. இந்த முயற்சியில் ஹிந்தி பாடகி கனிகா கபூர், டெல்லி மாநாடு, சக்கிவாசுதேவ் சிவராத்திரி கொண்டாட்டம், இராஜஸ்தானில் ஒரு பெரிய தனியார் மருத்துவமனை என்று, பெரிய பெரிய அணித்தலைவர்களை (டீம் லீடர்ஸ்) ஊடகமாக்கிக் கொண்டு. மரபு சாராத உலகளவில் முன்னெடுக்கப்பட்டு வரும் பன்முகச்சந்தை முறையில் (மல்டிலெவல் மார்க்கெட்டிங்) கொரோனா தனிப்பாதையை உருவாக்கிக் கொண்டு கிழமைக்கு நூறு விழுக்காடு என்று வளர்ந்து வருகிறது. சனவரியிலேயே ஒட்டுமொத்த விமானச் சேவையையும் முடக்காத நடுவண் அரசு, டெல்லி மாநாடு என்கிற ஒரு (கொரோனா பரவல் முறையில் சிக்கிய) அணித்தலைவரை கண்டு பிடித்து விட்டு, அது தங்கள் கொள்கையான மதவாதத்திற்கு பயன்பட்ட நிலையில் நடுவண் அரசு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது. அதே பாணியில் எதிர்க்கட்சியினர் இதோ கோவையில் ஒரு சக்கி அணித்தலைவர் இருக்கிறார் என்று தங்கள் பங்குக்;கு மதவாத எதிர்ப்பை கொண்டாடின. ஆனால் கொரோனா- மரபு சாராத உலகளவில் முன்னெடுக்கப்பட்டு வரும் பன்முகச்சந்தை முறையில் (மல்டிலெவல் மார்க்கெட்டிங்) சனவரியில் இருந்து தடையில்லாமல் வெளிநாட்டில் இருந்து வந்த அனைவரையும் அணித்தலைவர்களாக பல்லாயிரம் குழுக்களை பெருக்கி வருகிறது. அந்தவகை சந்தையின் அடிப்படை நிலையில் கொரோனா பாதிப்பாளர்கள் 8, 16, 32, என்று வளர்ந்தபோதும் உள்ளீடாக அதன் (பன்முகச் சந்தைத்துவத்தின்) வலிமையை புரிந்து கொள்ளாத, ஏன் அறியவே மாட்டாத நடுவண் மாநில அரசுகள் ஊரடங்கால் கொரோனாவின் ஒரு பாதையை மட்;டுமே அடைக்கிறார்கள் என்பதை அறிய மாட்டாதவர்களாக இருக்கின்றனர். ஆனால் இன்றைக்கு வளர்ந்திருக்கிற எண்ணிம தொழில் நுட்பத்தில் கொரோனாவிற்கு ஊடகமாகத் திகழ்கிற அனைத்து தரப்பினரையும் எளிதாக கண்டறிந்து அவர்களை, கொரோனா பாதிக்காதவர்களே தனிமைப் படுத்த வகைசெய்து, கொரோனாவை வலுவிழக்கச் செய்ய முடியும். அதற்கு செல்பேசி எண்கள் மூலம் இவர்கள் எல்லாம் கொரோனா பாதித்தவர்கள், இவர்கள் எல்லாம் கொரோனா பாதித்தவர்களோடு தொடர்பில் உள்ளவர்கள் என்பதை மக்களுக்கு அறிவித்தால் போதும். மக்கள் கொரோனா பாதிப்பாளர்களிடம் இருந்து தங்களை விலக்கிக் கொள்வர். அடுத்த கட்டமாக அரசு கொரோனா பாதித்தவர்களுக்குச் சோதனை, சிகிச்சை இவற்றை வரம்பில்லாமல் முன்னெடுத்து கொரோனாவை முற்றாக ஒழித்துக் கட்ட முடியும். “கொரோனா ஊரடங்கையும் மீறி தீவிரமாக பரவுகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கிழமைதோறும் 100 விழுக்காடு உயர்வு. இந்தியாவில் 2 கிழமைகளுக்கு முன் 82 ஆக இருந்த உயிர் பலி தற்போது 437 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்காக நாட்டில் கடந்த மாதம் 24ம் தேதி 21 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 14ம் தேதியுடன் இது முடிந்த பிறகு மே 3ம் தேதி வரையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் முன்பாக சிறிய அளவில் இருந்த கொரோனா பாதிப்பும், பலி எண்ணிக்கையும், 90 விழுக்காடு மக்கள் வீட்டில் முடங்கியுள்ள போதிலும் கிழமைக்கு 100 விழுக்காடு என்ற அளவில் உயர்ந்து கொண்டே வருகிறது” என்று தற்பொழுது அனைத்து ஊடகங்களிலும் செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல். என்று, மரபு சாராத உலகளவில் வணிகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பன்முகச்சந்தை முறையில் கொரோனா பரவும் வாய்ப்பை புரிந்து கொள்ளாமல், நாட்டில் கடந்த 3ம் தேதி நிலவரப்படி கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,947 ஆகவும், பலியானவர்கள் 82 ஆகவும் இருந்தது. அடுத்த ஒரு கிழமையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 மடங்காக உயர்ந்தது. என்றெல்லாம் செய்தி பரப்பிக் கொண்டிருப்பதில் ஆகப்போவது ஒன்றும் இல்லை. சோதனைகளை அதிகப்படுத்தி, இவர்கள் எல்லாம் கொரோனா பாதித்தவர்கள், இவர்கள் எல்லாம் கொரோனா பாதித்தவர்களோடு தொடர்பில் உள்ளவர்கள் என்பதை மக்களுக்கு அறிவித்தால் போதும். மக்கள் கொரோனா பாதிப்பாளர்களிடம் இருந்து தங்களை விலக்கிக் கொள்வர். அதற்கு தற்போது நடுவண் அரசு வெளியிட்டுள்ள ஆரோக்கியசேது செயலியே கூட போதும். அதில் கொரோனா நோயாளிகள் தங்களைத் தாங்களே பதிவிடும் முறையைத்தாம் அரசு அமைத்திருக்கிறது. அதனால் அது பயனின்றி கிடக்கிறது. அந்த முறையை மாற்றி, கொரோனா நோயாளிகளை அதில் அரசு பதிவிட்டால் போதும். சரிபாதி வேலை முடிந்து விடும். அடுத்து சரிபாதி வேலையான எல்லையில்லாமல் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை, பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து மருத்துவமனைகளிலும் சிகிச்சை என்பதாக கொரோனாவை முற்றாக ஒழித்துக் கட்டலாம். அரசுகள் செய்து வரும் தலையைச் சுற்றி மூக்கை தொடும் நடப்பு வேலைகளால் கொரோனாவோடு காலத்திற்கும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கலாம் அவ்வளவுதான்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



