சீனாவிலிருந்து 24000 எண்ணிக்கை வந்து சேர்ந்தன. இன்னும் இலட்சக் கணக்கில் கேட்பு வழங்கப்பட்டிருக்கிறது. என்பதோடு- அவைகளை கொரோனா கண்டுபிடிப்புக்கான பெரிய கருவி போலவே அடையாளப் படுத்தி ஊடகங்கள்- அது என்ன? ஏது? என்று கூட தெரியமலேதாம் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. மு.க.ஸ்டாலின் கூட அது என்ன விலை என்று தமிழக முதல்வரை நச்சரித்துக் கொண்டிருக்கிறார். ஒரு பெரும் படிப்பாளி நாடு நாடாகப் போனான். அந்தப் பெரிய அளவில் ஒரு புத்தகத்தை சீனாவில் இருந்து இறக்குமதியான இந்த கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் பலஇலட்சம் மதிப்புள்ள கொரோனா கண்டுபிடிப்புக் கருவிகள் போன்றதல்ல. இத்தனை நாளும் அந்த அதிக விலை கருவிகளை குறைந்த எண்ணிக்கையில் வைத்துக் கொண்டுதான் கொரோனா பரவலுக்கு எதிராக- இந்திய அளவில் ஊரடங்கு எல்லாம் நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கிறோம். கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள்:- பெண்கள் மாதவிலக்கு தள்ளிப்போனால் தாய்மை அடைந்து விட்டார்களா என்று பார்ப்பதற்கு ஒரு சிறிய பேழையை மருந்துக் கடைகளில் வாங்கி நாம் பயன்படுத்தி வருகிறோம். அதுபோல, அதே மாதிரியான தொழில் நுட்பம் கொண்ட சிறிய பேழைககள் தாம் இந்த கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள். நாமே அதன் நுட்பம் அறிந்து தயாரித்தால் அதிக பட்சம் 100 ரூபாய்தான் செலவாகும். தற்போதைக்கு சினாவில் இருந்து தருவிப்பது ரூ200 இருக்கலாம் என்று கருதப்படுகிறது. சீனாவிலிருந்து 24000 எண்ணிக்கை வந்து சேர்ந்தன. நாம் முன்பே கேட்பு வழங்கியது அமெரிக்காவிற்கு போய்விட்டது. இன்னும் இலட்சக் கணக்கில் கேட்பு வழங்கப்பட்டிருக்கிறது. என்பதோடு- அவைகளை கொரோனா கண்டுபிடிப்புக்கான பெரிய கருவி போலவே அடையாளப் படுத்தி ஊடகங்கள்- அது என்ன? ஏது? என்று கூட தெரியமலேதாம் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. அதனால் தான் மு.க.ஸ்டாலின் கூட அது என்ன விலை என்று தமிழக முதல்வரை நச்சரித்துக் கொண்டிருக்கிறார். அதுவும் இப்போது பெரிய செய்தியாகப் பேசப்பட்டு வருகிறது. பலஇலட்சம் மதிப்புள்ள, கொரோனா நுண்ணியிரி கண்டுபிடிப்பு கருவிகள் நேரடியாக, நமது தொண்டையிலிருந்து எடுக்கப்படும் சளி மாதிரியில் கொரோனா கிருமி இருக்கிறதா என்று சொல்லக் கூடியவைகள். அவை 100 விழுக்காடு உறுதியான முடிவைத் தருவனவாகும். அவற்றில் முடிவு தெரிய 24மணி நேரத்திற்கு அதிகமாக கால தாமதமாகும். ஆனால் ஒரு 85லிருந்து 100 விழுக்காடு வரையிலான முடிவைத் தருவனவாகும் இந்த கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் என்கிற ஒரு முறை பயன்பாட்டிற்கான சிறு பேழைகள். இவைகள் நேரடியாக கொரோனா நுண்ணயிரிகளை அடையாளம் காட்டுவன அல்ல. மாறாக நாம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், நமது முழு இரத்தம், சீரம் அல்லது பிளாஸ்மா மாதிரிகளில் கொரோனாவுக்கு எதிராக உருவான எதிர்உயிரிகளைக் (ஆன்டிபாடிகளைக்) கண்டறிவதற்கான ஒரு தரமான பக்கவாட்டு ஓட்ட (இம்யூனோக்ரோமாட்டோகிராபிக்) மதிப்பீடாகும். முடிவுகள் 10 நிமிடங்களில் கிடைக்கும். பயன்படுத்த எளிதானது. முடிவுகளை பார்வைக்கு படிக்க முடியும். ஒரு பகுப்பாய்வி தேவையில்லை சோதனைப் பேழையில் வண்ணத் துகள்களுடன் இணைந்த மறுசீரமைப்பு கொரோனா ஆன்டிஜென் (வேதிப்பொருள்) உள்ளது. பேழையின் குளிவில் ஒரு மாதிரி சேர்க்கப்படும்போது, மாதிரியில் உள்ள எந்த நமது இரத்தத்தின் ஆன்டிஜென் இணைப்போடு பிணைக்கப்பட்டு, வண்ண கொரோனா நுண்ணுயிரி ஆன்டிஜென்-எதிர்உயிரி வளாகங்களை உருவாக்குகிறது. இந்தக் கலவை சவ்வு வழியாக பக்கவாட்டாக சோதனை பகுதிக்கு இடம்பெயர்கிறது. இந்த சோதனை பகுதியில், மனித எதிர்ப்பு ஐ.ஜி.எம் மற்றும் மனித எதிர்ப்பு ஐ.ஜி.ஜி ஆகியவை சவ்வு மீது அசையாமல் உள்ளன. இவை உருவான எந்த ஐ.ஜி.எம் மற்றும் ஐ.ஜி.ஜி வளாகங்களையும் கைப்பற்றுகின்றன, இதன் விளைவாக வண்ண கோடுகள் தோன்றும். எனவே, மாதிரியில் கொரோனாவை எதிர்ப்பதற்கான எதிர்உயிரிகள் இருந்தால், சோதனை வரி பகுதியில் ஒரு வண்ண கோடு தோன்றும். அந்த மாதிரி எடுக்கப்பட்ட நபருக்கு கொரோனா உள்ளது என்று பொருள்.
05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சீனாவிலிருந்து 24000 எண்ணிக்கை அனுப்பி வைக்கப்பட்ட கொரோனா அதிவிரைவு அடையாளங்காட்டிகள் குறித்த பரப்புரைகள் நமக்கு புகழ்பெற்ற தெனாலிராமனின்
“திலகாட்ட மகிடபந்தனம்” கதையைத்தான் நினைவூட்டுவதாக உள்ளது.
‘’நான் படிக்காத புத்தகமில்லை. என்னோடு வாதம் செய்து ஜெயிக்க யாருண்டு? என்று அறைகூவல் விட்டான்,
விஜய நகரத்துக்கும் போனான்.
அரசர் கிருஷ்ண தேவராயர் தெனாலிராமனைத் தேர்ந்தெடுத்தார் “நீதான் அவனோடு வாதம் செய்து வெல்ல வேண்டும்” என்றார்.
அடுத்தநாள் அவை கூடியது.
அரசரும் பெரிய பெரிய அறிஞர்களும் சூழ்ந்திருந்தனர்.
அந்தப் பக்கம் ‘படிப்பாளி’
அருகில் ஏராளமான புத்தக மூட்டைகள்,
இந்தப்பக்கம் தெனாலிராமன் ,
அருகில் ஒரே ஒரு – பெரிய புத்தகம்!
‘படிப்பாளி’ அதுவரை பார்த்ததில்லை.
சந்தேகம் வந்தது. ‘நாம் இதுவரை படிக்காத புத்தகமாக
இருக்கிறதே!’ யோசித்தபின் கேட்டான்.
“அது என்ன புத்தகம்?”
தெனாலி சொன்னார், “திலகாட்ட மகிட பந்தனம்.
இதிலிருந்துதான் நான் கேள்விகளைக் கேட்கப்
போகிறேன்.” இப்போது படிப்பாளி பரபரப்பானான்.
‘இது என்னடாது, வம்பாப் போச்சு,
இப்படி ஒரு புத்தகத்தை இதுவரை நாம் கேள்விப்பட்டதும் இல்லையே! எல்லா நாடும் சுற்றி – ஏராளமான மொழி கற்று வந்த நமக்கு இன்று என்ன சோதனை?’ இருந்தாலும் சொன்னான்.
“திலகாட்ட மகிட பந்நதனம் தானே! ஆகாகா! நான் படித்திருக்கிறேன், ஆனால் இன்றைக்கு எடுத்து வரவில்லை, நாம் நாளை சந்திப்போம்” என்றான்.
அவ்வளவுதான் -அன்றிரவே சொல்லிக்கொள்ளாமல்; போய்ச் சேர்ந்தான் அந்த உலகப்புகழ் படிப்பாளி!
அரசர் கிருஷ்ண தேவராயருக்கு மகிழ்ச்சி.
தனது நாட்டின் மானம் காப்பாற்றப் பட்டதற்கு நன்றிகூறி,
தெனாலிராமனுக்குப் பரிசுகளும் தந்தார்.
பிறகு, ஆவலை அடக்க முடியாமல் கேட்டார்.
“அந்தப் புத்தகத்தைக் கொடு”
‘பெரும் படிப்பாளிக்கே தண்ணி காட்டிய புத்தகமல்லவா?” திறந்து பார்த்தார்.
புத்தகத்தைச் சுற்றிக் கட்டியிருந்த மணிக்கயிற்றை அவிழ்த்தால், அது புத்தகமே அல்ல. புத்தகம் போல செய்யப்பட்ட ஒரு மரப்பெட்டி அது.
அதோடு ஒரு மாடுகட்டும் கயிறு,
கொஞ்சம் எள்ளு, சில காய்ந்த குச்சிகள்! ஆவ்வளவுதான் உள்ளே இருந்த பொருள்கள்!
“என்ன இது?” என்பது போலத் தெனாலியைப் பார்த்தார்.
தெனாலி சொன்னார்:
“திலகம்(எள்), காட்டம்(விறகு), மகிடபந்தனம்(எருமை கட்டும் கயிறு). என்று.
கொரோனா நோயைக் கண்டறிய உதவுவதற்கான செலவு குறைந்த முறை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



