Show all

35அ, 370 ரத்து அறிவிப்புக்கு கமல் தெளிவான கண்டனம்! இந்தியாவில் பலருக்கு 35அ, 370 குறித்த அடிப்படையே தெரியாத நிலையில்.

370 மற்றும் 35அ ஆகிய சட்டப்பிரிவுகளை நீக்கிய விதம் ஜனநாயகத்தின் மீது நடைபெற்ற மிகப் பெரிய தாக்குதல் ஆகும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

21,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தவறானது! 35அ, 370 ரத்து அறிவிப்பு. மாநில உரிமைகளுக்கு எதிரானது; உண்மையில் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் முன்னெடுக்கப் பட வேண்டிய சிறப்புத் தகுதிதான் 35அ, 370. என்பதெல்லாம் தமிழகத் தலைவர்களுக்கு மட்டுமே புரிந்திருக்கிறது என்பதும் இந்திய அரசியல்வாதிகள் பலருக்கும் இது மாநில உரிமை அடிப்படைகளுக்கான சிறப்பான முன்னெடுப்பு என்பது கூட தெரிந்திருக்க வில்லை என்பதும் மிகப்பெரிய வரலாற்றுச் சோகம்.   

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்புத் தகுதியை அளிக்கும் 370 சட்டப்பிரிவை நடுவண் அரசு நேற்று நீக்கியது. இதற்கு தமிழக  அரசியல் கட்சிகள் மட்டுமே கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

மற்றபடி எதிர்ப்பு தெரிவித்த மற்றவர்கள் 35அ, 370 குறித்த அடிப்படைகள் ஏதும் அறியாதவர்களாக வெறுமனே பாஜக எதிர்நிலைக் கருத்தாக எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள். 

ஏன் ஜம்மு-காஷ்மீர் தலைவர்களே கூட 35அ, 370 குறித்த அடிப்படைகள் ஏதும் அறியாதவர்களாக இருக்கிறார்கள். இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து நேற்று வரை அதை அவர்களுக்கு பயன்படுத்தத் தெரியவில்லை; நாய்பெற்ற தெங்கம்பழம் என்று தமிழல் ஒரு செலவடை உண்டு. அவ்வாறாகவே 35அ, 370 என்னும் சிறப்புத் தகுதியை உருட்டிப் பார்த்திருக்கிறார்கள் என்பது இப்போது தெரிய வருகிறது. 

35அ, 370 சிறப்புத் தகுதியைப் பெற்றுத் தந்த மாமன்னர் ஹிரிசிங் நோக்கம் அவர்களுக்கு தெரிந்திருக்க வில்லை. மாமன்னர் ஹரி சிங்கை அவர்கள் கொண்டாட வில்லை. நாம் அண்ணாவிற்கு, பெரியாருக்கு ஊர்தோறும் சிலை வைத்து, தெருக்களுக்கு பெயர் வைத்து, பொது நிறுவனங்களுக்கு அவர்களின் பெயர் சூட்டி நினைவை கொண்டாடி வருவதாலேயே, தமிழக அடிப்படைகளுக்கு மாறுபட்ட கொள்கை பாஜக, தமிழத்தில் நுழைய முடியாமல் தடுமாறுகிறது. 

மாமன்னர் ஹரி சிங்கை அவர்கள் தேசத் தலைவராக கொண்டாடியிருக்க வேண்டும். மாமன்னர் ஹரிசிங்கிற்கு ஊர்தோறும் சிலை அமைத்து இருந்து இருக்க வேண்டும். அவரின் கொள்கைக்காக அவரின் பெயரைத்தாங்கி ஒரே ஒரு கட்சியாவது உருப்பெற்றிருக்க வேண்டும். ஏதுவுமே முன்னெடுக்காத ஜம்மு-காஷ்மீர் தலைவர்களுக்கு 35அ, 370 ரத்து அறிவிப்புக்கு முறையான எதிர்ப்பை கூட பதிவு செய்யத் தெரியாததுதான் பாஜக நடுவண் அரசுக்கு 35அ, 370 ரத்துக்கு கிடைத்த மிகப் பெரிய பலம். 

தமிழகத் தலைவர் கமல்ஹாசன் 35அ, 370 ரத்து அறிவிப்புக்கு தெளிவாக தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார்கள். அவர் கூறுகையில், 370 மற்றும் 35அ ஆகிய சட்டப்பிரிவுகளை நீக்கிய விதம் மக்களாட்சியின் மீது நடைபெற்ற மிகப் பெரிய தாக்குதல். இது போன்ற சிறப்புநிலை முடிவுகள் மீது நாடாளுமன்றத்தில் நடைபெற்றிருக்க வேண்டிய எவ்வித விவாதத்தையும் மேற்கொள்ளாமல் தங்களுக்கு அவையில் இருக்கும் பெரும்பான்மை ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டு நடுவண் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. 370 மற்றும் 35அ ஆகிய சட்டப்பிரிவுகள் இயற்றப்பட்டதற்கு வரலாறு உண்டு. எனவே அதில் மேற்கொள்ளப்படுகிற எந்த மாற்றமும் தகுந்த ஆலோசனையுடன் நடைபெற்றிருக்க வேண்டும். 370 மற்றும் 35அ ஆகிய சட்டப்பிரிவுகளை சட்டப்பூர்வமாக நீக்கப்படுவது குறித்து தனியான விவாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். 

எதிர்க்குரல்களை முடக்கும் இந்த அரசின் ஆதிக்கப் போக்கை மக்கள் நீதி மய்யம் கட்சி கண்டிக்கிறது. சென்ற முறை பணமதிப்பிழப்பு, இந்த முறை 370 சட்டப்பிரிவு நீக்கம் என்று தொடர்ந்து சர்வாதிகாரமும் பிற்போக்குத்தன்மையும் கொண்ட செயல்களாகவே இந்த அரசால் மேற்கொள்ளப்படுகிறது என கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,236.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.