தேர்தல் கருத்துப்பரப்புதலில் அரவிந்த் கெஜ்ரிவாலை ஒரு அந்நியர் போலவேதான் அடையாளம் காட்டியது பாஜக. மூன்றாவது முறையும் முதல்வர் ஆகிறார் உண்மையான தேசியவாதியாக. போலிதேசிய அடையாளத்தில் உலாவரும் ஹிந்துத்துவா, ஹிந்தி மாநிலக்கட்சிகளான- பாஜக காங்கிரஸை எதிர்த்து வெற்றி வாகை சூடி இருக்கிறார். 28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: மூன்றாவது முறையும் முதல்வர் ஆகிறார் உண்மையான தேசியவாதி. போலிதேசிய அடையாளத்தில் உலாவரும் ஹிந்துத்துவா, ஹிந்தி மாநிலக்கட்சிகளான- பாஜக காங்கிரஸை எதிர்த்து வெற்றி வாகை சூடி இருக்கிறார். தேர்தல் கருத்துப்பரப்புதலில் அரவிந்த் கெஜ்ரிவாலை ஒரு அந்நியர் போலவேதான் அடையாளம் காட்டியது பாஜக. இல்லையில்லை இவர் எங்களவர்தான் என்று தலைநகரத்து மக்களே எழுபதுக்கு அறுபத்தியிரண்டு மதிப்பெண்கள் வழங்கி அடையாளப் படுத்தியிருக்கிறார்கள். காங்கிரஸ் திருந்தலாம்: ஏனென்றால், இராகுல் போன்றவர்கள் இந்திய ஒன்றியத்தில், மாநில உணர்வுகளை மதிப்பதுதான் உண்மையான தேசியமாக இருக்க முடியும் என்பதை புரிந்து கொண்டிருப்பதை பல இடங்களில் அடையாளங்காட்டியிருக்கிறார். காங்கிரஸ்காரர்கள் இராகுலைப் பின்தொடர்வார்களேயானால் காங்கிரஸ் திருந்தலாம். பாஜக திருந்தாது. ஏனென்றால் ஹிந்துத்துவா, ஹிந்திக்கு அனைத்து மாநிலங்களும் கைகட்டி வாய் பொத்தி நிற்க வேண்டும் என்பதுதான் அதன் அடிப்படை நோக்கமே. தெற்கே தமிழகம் பாஜகவை தெளிவாகப் புரிந்து கொண்டிருப்பதைப் போல, வடக்கே தலைநகரமும் புரிந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாகும். இனி ஒட்டு மொத்த இந்தியாவிலும் போலிதேசியத்தை பொசுக்க- மதச்சார்பின்மை, மாநில உரிமைகளைக் கொண்டாடல் என்கிற உண்மை தேசிய தீ பரவும். ஹரியானாவில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து, சிரமப்பட்டுப் படித்து நடுவண் வருவாய்த்துறையில் வேலைக்குச் சேர்ந்தவர் கெஜ்ரிவால். அங்கு பணிபுரியும்போதே அரசுத் துறைகளில் தகவல்கள் வெளிப்படையாக வழங்காமல் இருப்பதே ஊழலுக்கு வழிவகுப்பதாகச் சுட்டிக்காட்டி அதை எதிர்த்துப் போராடினார். பணியிலிருந்து தற்காலிகமாக ஓய்வு பெற்று டெல்லியை மையமாகக் கொண்டு பரிவர்த்தன் என்ற அமைப்பை உருவாக்கினார். இதன்மூலம் தகவல் பெறும் உரிமைக்காக அமைதியான முறையில் போராடினார். இதையடுத்து அரசுப் பணியை உதறிவிட்டு, பரிவர்த்தன் அமைப்பின் வேலைகளில் இறங்கினார். இதன் விளைவாகவே பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்பு டெல்லியில் தகவல் பெரும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இதே சட்டம் நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது. சட்டம் நிறைவேற்றப்பட்டதுடன் இருக்காமல் அதுதொடர்பாக மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று இந்தியா முழுவதும் பயணித்து தகவல் பெரும் உரிமைச் சட்டம் குறித்து விளக்கினார். தொடர்ந்து சமூகப் போராளி அன்னா ஹசாரே தலைமையில் ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில், மக்கள் பிரச்னைக்காக ஆளுநரைச் சந்திக்கச் சென்றபோது, கெஜ்ரிவாலைப் பார்க்க மறுப்பு தெரிவித்துவிட்டார் ஆளுநர். அதனால் அவர் வீட்டிலேயே மூன்று நாட்களுக்கும் மேல் தங்கியிருந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி ஆளுநரைக் கதிகலங்கச் செய்தார். டெல்லியில் நடந்த பல்வேறு சிக்கல்களுக்கும் ஆம் ஆத்மிதான் காரணம் எனப் பாஜக குற்றம்சாட்டி வந்தது. ஆனால், அதைச் சற்றும் காதில் வாங்கிக்கொள்ளாமல், அரசுப் பணிகளில் மட்டும் முழுக் கவனம் செலுத்தி வந்தார். இன்றைய சட்டமன்றத் தேர்தல் முடிவுகளிலும் அசைக்க முடியாத வெற்றி பெற்று மூன்றாவது முறையாக முதல்வர் பதவியைத் தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



