கொரோனா பாதிப்புகள் குறித்து அன்றாட நிலவரங்கள் அனைத்து ஊடகங்களிலும் ஏராளமாக சொல்லப்படுகின்றன. ஆதாலால் அது நமக்கு மனப்பாடமாகவே தெரிந்திருக்கிறது. அதை விட முதன்மையாக நாம் மனப்பாடமாக அறிந்துகொண்டிருக்க வேண்டிய செய்தி- கொரோனாவிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்ளமுடியும் என்பதுதான். 08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா பாதிப்புகள் குறித்து அன்றாட நிலவரங்கள் அனைத்து ஊடகங்களிலும் ஏராளமாக சொல்லப்படுகின்றன. ஆதாலால் அது நமக்கு மனப்பாடமாகவே தெரிந்திருக்கிறது. அதை விட முதன்மையாக நாம் மனப்பாடமாக அறிந்துகொண்டிருக்க வேண்டிய செய்தி- கொரோனாவிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்துக் கொள்ளமுடியும் என்பதுதான். இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. கொரோனா ஒருவருக்கு எப்படிப் பரவுகிறது? இதற்கான பதில் நமக்கு முதலாவதாகத் தெரிந்திருக்க வேண்டும். கொரோனா முதலாவதாக நமது மூக்கு அடுத்து வாய் அடுத்;து கண் வழியாக பரவு முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். ஆகா கொரோனாவிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நமது முதலாவது கவனம் மூக்கு, வாய், கண் இந்த மூன்றின் மீதும் இருக்க வேண்டும். முகமூடி நம்மைக் கொரோனாவிலிருந்து பாதுகாப்பதற்கான முதன்மைக் கருவி என்பதை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம். கொரோனா உள்ளவர் நம்மிடம் பேசும் போது நமக்கு கொரோன பரவாமல் பாதுகாப்பு அளிக்கும். கொரோனா உள்ளவர் இருமும் போதும், தும்மும் போதும் சாதாரண முகமூடிகள் கொரோனாவிலிருந்து நம்மைப் பாதுகாக்க முடியாது. அதனால், அடுத்ததாக எப்போதும் மற்றவர்களுக்கும் நமக்கும் மிகக் குறைந்து ஒரு மீட்டர் இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். அது நம்மை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும். அடுத்ததாக, நமது இந்த மூக்கு, வாய், கண் இந்த மூன்றையும் கொண்டிருக்கிற நமது முகத்தோடு அதிகம் தொடர்புடையவை நமது கைகள்தாம். ஆகவே நமது முகத்தோடு அடிக்கடி உறவாடுகிற இந்தக் கைகள் நமது முகத்தோடு மட்டும் உறவாடுகிற உறுப்பு என்றால் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் நம்முடைய கைகள் நம்முடைய முதன்மையான கருவி. அதனால் அவற்றை அனைத்து வகையான வேலைகளுக்கும் நாம் பயன்படுத்தி வருகிறோம். மற்றவர்கள் கைத்தொட்ட பலநூறு இடங்களை நமது கைகள் தொடுகின்றன. ஆகவே கொரோனா இருப்பவர் அவரது முகத்தைத் தொட்ட கைகளால் பலஇடங்களையும் தொட்டு கொரோனாவைப் பரப்பிக் கொண்டே செல்கிறார். கொரோனா அந்தந்தப் பொருட்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட நேரம் வரை அந்தப் பொருட்களில் யாராவது வந்து தொட்டால் ஒட்டிக் கொள்ளலாம் என்று காத்திருக்கின்றன. மற்றவர்களோடு கை குலுக்குவதில் நமது கையைக் குலுக்குகிறவர் கொரொனா இருப்பவர் என்றால் நேரடியாகவே அவரிடம் இருந்து கொரோனாவையும் கைப்பற்றுகிறோம். சரி நமது கைக்கு கொரோனா நுண்ணுயிரி பரவி விட்டது. அது நமது கையில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மற்றபடி நாம் தொடும் அனைத்து இடங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் பரவவும் செய்கிறது. ஆனால் அதனாலேயே நமக்கு கொரோனா தொற்று வந்து விடுமா என்றால். அதனாலேயே நமக்கு கொரோனா வராது. ஆனால் நமது கை நமது முகத்தில் ஒரேயொரு முறை பட்டு விட்டாலும் நமக்கு கொரொனா தொற்றுவது நூறு விழுக்காடு உறுதி. ஆகவே நாம் முன்னெடுக்க வேண்டிய நான்காவது நடவடிக்கை வெளியில் சென்று வீடு திரும்பி வந்து நாம் முழுத்தூய்மைப்பாட்டிற்கு வரும்வரை எக்காரணம் கொண்டும் முகத்தைத் தொடவேக் கூடாது. மற்ற மூன்று நடவடிக்கைகளில்:- முதலாவது முகமூடி. இரண்டாவது சமூக இடைவெளி. மூன்றாவது பாதுகாப்பாக வைத்;துக் கொள்ள வேண்டியது நமது கைகள். கைகளை தூய்மையாக வைத்துகொள்ள, கையுறை அணிய வேண்டும். அடிக்கடி கைகளை சோப்பால் இருபது வினாடி நன்றாக தேய்த்துக் கழுவ வேண்டும். நமது வீட்டில் இருந்து யாரும் வெளியில் செல்லாமலும், யாரும் நமது வீட்டிற்கு வராமலும், எந்தப் பொருட்களை வாங்கும் போதும், அவற்றை நன்றாகத் தூய்மைப் படுத்திப் பயன் படுத்தினால்- இவற்றை எத்தனை நாட்கள் நாம் நடைமுறைப் படுத்துகிறோமோ அத்தனை நாட்களுக்கு நம்மைக் கொரோனா தொற்றவே தொற்றாது. ஆனால் நமது வீட்டில் யாராவது வெளியில் சென்று வருகிறோம் என்றால் அவர்கள் கொரோனாவை சுமந்து வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதால், அன்றாடம் அவர்கள் வீட்டிற்கு வந்ததும் வெளியிலேயே கைகளையும் கால்களையும் நான்றாகத் தூய்பைத் படுத்திக் கொண்டு குளியலறைக்குள் நுழையலாம். குளியலறையில் அனைத்து ஆடைகளையும் சோப்பு நீரில் நனைத்து விட்டு குளித்து விட்டு வீட்டிற்குள் நுழைகிற முறையால் நம்மையும் நமது வீட்டில் இருப்பவர்களையும் கொரோனா தொற்றாமல் பாதுகாக்கலாம். இங்கே- எங்கேயும் சோம்பலோ, வெட்கமோ இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள தடைபோடுமேயானால் கொரோனா உங்கள் சோம்பலையோ வெட்கத்தையோ மதிக்காது. அடுத்து- யாருக்கு கொரோனா தொற்று இருக்கிறது. யாருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை தொண்டையில், உள் மூக்கில் இருந்து எடுக்கப்படுகிற சளி மாதிரியை சோதித்துதாம் ஒருவருக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். கொரோனா பாதிப்பு வந்தவர்கள் அனைவருக்கும், கொரோனா தொற்றியுள்ளதற்கான அறிகுறியை உடனே கொரோனா பாதித்தவர்களுக்கே கொரோனா உணர்த்துவதில்லை. ஆனால் அவர்களைக் கொரோனா தொற்றி விட்டதால்- அவர்கள் பேச்சு, தும்மல், முகத்தைத் தொடும் அவர்கள் கைகள் மூலம் கொரோனா பரவத் தொடங்கி விடும். இதனால், நீங்கள் இருமினாலோ அல்லது தும்மினாலோ டிஷ்யூ காகிதங்களைப் பயன்படுத்துங்கள். அதை மறக்காமல் குப்பையில் போட்டு கை கழுவுங்கள். கைக்குட்டைகளை காட்டிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் டிஷ்யூக்களை பயன்படுத்துங்கள். டிஷ்யூ காகிதம் இல்லை என்றால் உங்கள் முழங்கை மூட்டியைப் பயன்படுத்தி இருமுங்கள். கைப்பிடிகள், லிஃப்ட் பொத்தான்கள், போன்ற அதிகம் பேர் தொடும் பொத்தான்களை தொடுவதை தவிருங்கள். காய்ச்சல், இருமல், சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருப்பவர்களிடமிருந்து தள்ளி இருங்கள். உங்களுக்கு காய்ச்சல், இருமல், சுவாசப் பிரச்சனைகள் இருந்தால் எங்கும் போகாமல் வீட்டிலேயே இருங்கள் என்று மருத்துவர்கள் நாம் கொரோனாவை எப்படி பரப்பாமல் இருப்பது என்கிற அறிவுரையாகத் தெரிவிக்கிறார்கள்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



