நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொன்எழுத்துகளால் பொறிக்க வேண்டிய ஆலோசனையை வழங்கியுள்ளார், பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதற்கு: சுப்பிரமணியன் சாமி! “வருமான வரியை ஒழிக்க வேண்டும்” என்பதாக. ஆலோசனை வெல்லட்டும். வாழ்த்துக்கள் சுப்பிரமணியன் சாமி! 08,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: “வருமான வரியை ஒழிக்க வேண்டும்” என பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினரும் ஆன சுப்பிரமணியன் சாமி. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொன்எழுத்துகளால் பொறிக்க வேண்டிய ஆலோசனையை வழங்கியுள்ளார். மேலும், நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டியை 9 விழுக்காடாக உயர்த்த வேண்டும் என்றும், வங்கிக் கடனுக்கான வட்டி விகிதத்தை 9 விழுக்காடாக குறைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த மூன்று நடவடிக்கைகளை மேற்கொண்டால் உறுதியாக இந்தியா பொருளாதார வளர்ச்சியை மிக விரைவில் வென்றுவிடும் என்று தெரிவித்துள்ளார். சண்டிகரில் பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தான் இந்த வரலாறு போற்றிக் கொள்ளும் வகையிலான ஆலோசனைச் செய்தியை தெரிவித்தார். உண்மையிலேயே பாஜக இந்திய அரசு, இவரின் இந்த ஆலோசனையை முன்னெடுக்குமானல், இந்தியா உலகின் மிகப்பெரிய வல்லரசாக மாறும் என்பது திண்ணம். பொருளாதார வளர்ச்சிக்காக என்று: நாட்டின் பணப்புழக்கத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், பொதுத்துறை வங்கிகளுக்கு 70 ஆயிரம் கோடி வழங்கப்படும். வீட்டுக்கடன், வாகனக் கடன், தொழில் கடன் ஆகியனவற்றின் மீதான வட்டி விகிதங்கள் குறைக்கப் படும். வருமானவரி செலுத்தாத நபர்களுக்கு மின்னஞ்சல் மூலமே கவன அறிக்கை அனுப்பப்படும். பொருளாதார வளர்ச்சியைப் பெருக்க துணிச்சலான நடவடிக்கை எடுக்கப் படும் என்று, இந்திய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சப்பையான சில முன்னெடுப்புகளை செய்து வரும் நிலையில், பாஜகவின் ஒரு முதன்மைத் தலைவராக உள்ள சுப்பிரமணியன் சாமியின் இந்த ஆலோசனை மிகுந்த பாராட்டுக்கு உரியது. பத்தாயிரத்துக்கு மேற்பட்ட ஆண்டுகளாக தமிழ்க் குடும்பங்கள் தொழில் செய்துதான் குடும்பத்தை நிருவகித்து வருகின்றன. எந்த அரசும் தொழில் செய்தே நாட்டையும் நிருவகிக்க முடியும். மக்களிடம் எளிமையாகப் பெறும் வரிகள் மூலம் நாட்டை நிருவகிக்கும் வாய்ப்பின் காரணமாகத்தான் எல்லோரும் ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறார்கள். அரசுக்கு சாராயக்கடை நடத்தும் வாய்ப்பும் இருப்பதால், எதற்கும் கையாலாகாதவர்களும் கூட போட்டியில் இணைந்து கொள்கிறார்கள். வரிகளைப் பெறுவதற்கான துறைகள் அனைத்தும் மறுஉற்பத்தி சாராத இழப்பு மட்டுமே என்கிற ஒருவழிப் பாதையாகி மக்களின் உழைப்பு ஏராளமாக வீணடிக்கப் படுகிறது. உழைக்கும் மக்களுக்கு வரி ஏய்பாளர்கள் என்று பட்டம். தண்டிப்பதற்கு அறங்கூற்றுமன்றங்கள். வரி என்ற பெயரில் உழைப்பைச் சுரண்டுவது குற்றமா? உழைப்புச் சுரண்டலுக்கு உட்பட மறுப்பது குற்றமா? தமிழ்க்குடும்பம் பத்தாயிரத்திற்கு மேலான ஆண்டுகளாகப் பயணித்துக் கொண்டிருக்கிற, தமிழ்க்குடும்பம் தம்மையும் காத்துக் கொண்டு தம்மைப் பிணைத்துள்ள அயல்சட்ட சமுகத்திற்கு வரியும்செலுத்திக் கொண்டுதானே பயணித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்க்குடும்பத்தை போன்றதான சமுகத்தை கட்டமைக்க பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சாமி அருமையான ஆலோசனையை வழங்கியிருக்கிறார்கள். விழித்தெழவேண்டும் இந்தியா. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,255.
பணமதிப்பு நீக்கத்தால் இந்தியா பெற்ற இழப்புகள் அனைத்தும், சுப்பிரமணியன் சாமியின் இந்த ஆலோசனை நிறைவேற்றப் படும் போது ஈடுசெய்யப்படும் என்பது மறுக்க முடியாத உண்மை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.