பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்தக் கிழமை இன்று வெளியேறப் போவது கஸ்தூரியாம். உறுதியாகத் தெரிவிக்கின்றன கருத்துக் கணிப்புகள்; மிகக் குறைந்த வாக்குகளாம். 08,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தனது சமூகவலைதளப் பக்கத்தில் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து வந்தவர் கஸதூரி. பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லப்போவதில்லை என மறுத்து வந்த கஸ்தூரி, கடந்த இரண்டு கிழமைகளுக்கு முன்பு அதிரடியாக நிகழ்ச்சிக்குள் சென்றார். கஸ்தூரியைப் பார்த்து சக போட்டியாளர்களுக்கு உண்மையிலேயே கொஞ்சம் பயம் வரத் தான் செய்தது. மக்களும் இனி நல்ல பொழுதுபோக்கு இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால், பிக் பாஸ் எதிர்பார்த்த உள்ளடக்கம் எதுவும் கஸ்தூரி தரவில்லை. ஏறக்குறைய பிக் பாஸ் வீட்டின் வெத்து வேட்டாகினார் கஸ்தூரி. வெளியில் இருந்த அளவுக்கு அவரால் பிக் பாஸ் வீட்டில் செயல்பட முடியவில்லை. கீச்சு அரசியின் செயல்பாடுகள் மக்களைக் கவரவில்லை. இதற்கிடையே வனிதாவும் வர, கஸ்தூரிக்கும் அவருக்கும் இனி முட்டிக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், பிசுபிசுத்தது. சண்டை ஏற்பட்ட போதெல்லாம் சரணாகதி அடைந்து, அட கீச்சு கஸ்தூரியா இது என மக்களை ஆச்சர்யப்பட வைத்தார் கஸ்தூரி. தன் பெயர் வெளியில் கெட்டுப் போய் விடக் கூடாது என கவனமாக நடந்து கொள்கிறார் கஸ்தூரி. அதனால் வெளியேற்றப் படலத்தை மகிழ்ச்சியோடு எதிர்கொள்வார் கஸ்தூரி என்று தெரிய வருகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,255.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.