Show all

இவரல்லவா இந்தியாவை ஆளத் தகுதியானவர்! புகழ்ந்திட சொற்கள் கிடைக்காமல் நம்மைத் தடுமாறச் செய்திருக்கிறார் ஜெகன் மோகன்

மீண்டும் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் ஜெகன் மோகன். இவர் நமக்கு முதல்வராக வாய்த்திருக்கலாமே! ஏன் இந்தியாவையே இவர் ஆண்டால் எப்படியிருக்கும்? புகழ்ந்திட சொற்கள் கிடைக்காமல் நம்மைத் தடுமாறச் செய்திருக்கிறார் ஜெகன் மோகன். பல்லாண்டு வாழ்க ஜெகன் மோகன்

18,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒட்டுமொத்த இந்தியாவையே பொறாமை அடையச் செய்கின்ற வகையில் ஆந்திர அரசு நடந்துக் கொண்டுள்ளது. ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து பல்வேறு அதிரடி மாற்றங்கள் அம்மாநிலத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. 

மற்ற மாநில மக்கள், நமக்கு இதுபோன்ற ஓர் முதலமைச்சர் கிடைக்கவில்லையே என்று பொறாமைக் கொள்ளும் அளவிற்கு அவரின் ஆட்சி அங்கு சிறப்பாக நடைபெற்று வருவதைக் காணமுடிகின்றது.

இதை உறுதிச் செய்கின்ற வகையில், தற்போதைய கொரோனாவின் இக்கட்டான சூழ்நிலையில் பல அதிரடி நடவடிக்கைகளை அவர் செய்துள்ளார். எடுத்துக்காட்டாக ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு உதவியளிக்கும் விதமாக அறிவித்த நிதியுதவித் திட்டம் நாட்டு மக்களை திரும்பி பார்க்க வைக்கும் வகையில் இருக்கிறது. இத்திட்டத்தின்படி, சலவைத் தொழிலாளர்கள், சலூன் கடைக்காரர்கள் மற்றும் தையல்காரர்கள் என பல கூலித் தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது. இதன்மூலம் 2.47 லட்சம் பேர் பயனடைந்தனர். இதற்காக 247 கோடி ரூபாயை அவர் நேரடியாக ஒதுக்கி வைத்தார். இதுமட்டுமின்றி, ஊரடங்கின் இந்த இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியிருக்கும் ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டுநர்களுக்கும் உதவியளிக்கும் விதமாக ரூ.10 ஆயிரத்தை நிதியுதவியாக வழங்கியுள்ளார். 

மேலும் மற்ற மாநில மக்களையும், மாநில அரசுகளையும் வாயை பிளக்க வைக்கின்ற வகையில் புதிதாக 1,068 சடுதி வண்டிகளை ஆந்திர அரசு களமிறக்கியிருக்கின்றது.

இதில், 130 சடுதிவண்டிகள் உயிர் காக்கும் சிறப்புக் கருவிகளைக் கொண்ட தயாரிப்பாகும். மீதமுள்ள 938 சடுதிவண்டிகளில் 282 அடிப்படை பாதுகாப்பு வசதிகளைக் கொண்ட சடுதிவண்டிகள் ஆகும

கடைசியாக எஞ்சியிருக்கும் 656 வண்டிகளும் கிராமப்புறப் பகுதி மக்களுக்கு உதவியளிக்கும் வகையில் தங்கும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது. 

நாடே கொடிய நுண்நச்சு கொரோனாவிடம் சிக்கிக் கொண்டு திணறிக் கொண்டிருக்கின்றது. இம்மாதிரியான சூழ்நிலையில், மக்களைக் காக்கும் பணியில் எந்தவொரு தடங்களும் ஏற்படாமல் இருப்பதற்காக இத்தகைய அதிக எண்ணிக்கையில் சடுதிவண்டிகள் குவிக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்தியாவில் எந்தவொரு மாநிலமும் இந்தளவிற்கு அதிக எண்ணிக்கையில் சடுதி வண்டிகளைக் களமிறக்கியதில்லை என கூறப்படுகின்றது. 

ஒட்டுமொத்த நாட்டின் பார்வையும் ஆந்திராவின் பக்கம் திரும்பியுள்ளது. எனவே, ஆந்திர அரசின் வரலாற்றில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய வரலாற்றிலுமே மிக முதன்மையான இடத்தை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பிடித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது, பொதுமக்கள் அழைப்பு விடுத்தால், நகர்ப்புறங்களில் 15 நிமிடங்களிலும், கிராமப்புறங்களில் 20 நிமிடங்களிலும், மலைவாழ் கிராமங்களில் 30 நிமிடங்களிலும் சென்று சேரும் வகையில் இந்த சடுதிவண்டிகள்; வாங்கப்பட்டுள்ளன என்றார். 

ஒட்டுமொத்த சடுதி வண்டிகளையுமே, விஜயவாடாவில் நடைபெற்ற பேரளவான நிகழ்ச்சி ஒன்றில் கொடியசைத்து முதலமைச்சர் ஜெகன் மோடி ரெட்டி அனுப்பி வைத்தார். இவை மக்களின் நலனைக் காக்கம் விதமாக கொரோனா மற்றும் பிற நோய்களுக்கு எதிராக போராட இருக்கின்றன. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.