Show all

நாடு முழுவதும் தளர்வுகளோடு கூடிய ஊரடங்கு! மேலும் இரண்டு கிழமைகள் நீட்டிப்பு

நாடு முழுவதும் மேலும் 2 கிழமைகளுக்கு தளர்வுகளோடு கூடிய ஊரடங்கு நீட்டிப்பு- உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: நடுவண் உள்துறை அமைச்சகம் பொது முடக்கத்தை, தளர்வுகளோடு கூடிய ஊரடங்காக, மேலும் இரண்டு கிழமைகள் அதாவது 4,வைகாசி ஞாயிற்றுக் கிழமை வரை (மே17) நீட்டித்து உத்தரவு பிறப்பித்திருக்கிறது. 

மேலும் இரண்டு கிழமைகள் நீட்டிக்கப்படும் ஊரடங்கில் தளர்வுகள் யாவை? எந்த அடிப்படையில்?

கொரோனா ஆட்சிமை இல்லாத மாவட்டங்கள் பச்சை மண்டலம் எனவும், கொரோனா ஆட்சிமை மிகுந்த மாவட்டங்கள் சிவப்பு மண்டலம் எனவும், கொரோனா ஆட்சிமை குறைந்த மாவட்டங்கள் ஆரஞ்ச் மண்டலங்கள் என்றும்  அடையாளப்படுத்தப் படுகின்றன.

முதலாவதாக பச்சை மண்டலப் பகுதிகளில்:-
நாடு முழுவதும் தடை செய்யப்பட்ட சில நடவடிக்கைகள் தவிர, அனைத்து நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படும். பேருந்துகள் 50 விழுக்காடு பயணிகளுடன் இயங்கலாம். பேருந்;துகள் 50 விழுக்காடு ஊழியர்களுடன் செயல்படலாம். குறிப்பிட்டு தடை செய்யப்படாத அனைத்து நடவடிக்கைகளும் இங்கு அனுமதிக்கப்படும். ஆக பச்சை மண்டலத்தில் 50 விழுக்காடு பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இரண்டாவதாக ஆரஞ்ச் மண்டலப் பகுதிகளில்:-
கார்கள் ஒரு ஓட்டுநர் மற்றும் ஒரு பயணியுடன் அனுமதிக்கப்படும். மாவட்டங்களுக்கு இடையே குறிப்பிட்ட செயல்பாடுகளுக்கு மட்டும் தனி நபர்களும், வாகனங்களும் அனுமதிக்கப்படுவர். 4 சக்கர வாகனங்களில் ஓட்டுநரைத் தவிர்த்து அதிகபட்சம் 2 பயணிகள் போகலாம். இரு சக்கர வாகனங்களில ஒருவருக்கு மட்டும் அனுமதி உண்டு.

மூன்றாவதாக சிவப்பு மண்டலப் பகுதிகளில் மற்றும் பொதுவான தடைகளும் அனுமதிகளும்:-
இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை கட்டாயத்தேவை அல்லாத அத்தனை நடவடிக்கைகளும் முழுமையாக தடை செய்யப்படுகின்றன.

வான்வழிப் போக்குவரத்து, தொடர்வண்டி, மெட்ரோ தொடர்வண்டி, மாநிலங்களுக்கு இடையிலான சாலைப் போக்குவரத்து, பள்ளிகள், கல்லூரிகள், இதர கல்வி நிறுவனங்கள், பயிற்சி மையங்கள், உணவகங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடுகிற இடங்கள், உடற்பயிற்சி மையங்கள், விளையாட்டு மையங்கள், சமூக, அரசியல், கலாச்சார கூடுகைகள், மதஅடிப்படையாகக் கூடும் இடங்கள். ஆகியனவற்றுக்கு முழுமையான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

எனினும் நடுவண் உள்துறை அனுமதித்தபடி குறிப்பிட்ட தேவைகளுக்காக வான்வழி, தொடர்வண்டி வழி, சாலைவழிப் போக்குவரத்து அனுமதிக்கப்படும்.

65 அகவைக்கு மேற்பட்ட நபர்கள், கர்ப்பிணிகள், 10 அகவைக்கு உட்பட்ட குழந்தைகள் வீட்டில் இருக்க வேண்டும். கட்டாயமான உடல்நலத் தேவைகளுக்கு விதிவிலக்கு உண்டு.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.