Show all

தமிழகத்தில் சிவப்பு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 26ல் இருந்து 12 ஆக குறைந்து உள்ளன.

சிவப்பு மண்டலங்களில் 7 நாட்களில் புதிய தொற்று இல்லாத காரணத்தினால் அவைகள் ஆரஞ்சு மண்டலங்களாகத் தற்போது மாற்றப் பட்டிருக்கின்றன.

19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: சிவப்பு மண்டலங்களில் 7 நாட்களில் புதிய தொற்று இல்லாத காரணத்தினால் அவைகள் ஆரஞ்சு மண்டலங்களாகத் தற்போது மாற்றப் பட்டிருக்கின்றன. நலங்கு நடவடிக்கை, பரிசோதனை நிலவரம், குணமடைவோர் விகிதத்தை அடிப்படையாக கொண்டு மண்டலங்கள் பிரிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் சிவப்பு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 26ல் இருந்து 12 ஆக குறைந்து உள்ளன.

முன்னதாக, மாவட்டத்தில் 15 பேர் அல்லது 4 நாட்களுக்குள் தொற்று எண்ணிக்கை இரட்டிப்பாகும் மாவட்டங்கள் சிவப்பு மண்டலமாகவும், 15 நபருக்கு குறைவாக தொற்று உள்ள மாவட்டம் பச்சை மண்டலமாகவும், 28 நாட்கள் புதிதாக எந்த கொரோனா பாதிப்பும் கண்டறியப்படாத மாவட்டம் பச்சை மண்டலத்திலும் வகைப்படுத்தப்பட்டன.

அதன்படி நேற்று வரை தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருப்பூர் உட்பட 26 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் இருந்தன. ஆனால், தற்போது மாவட்டங்களை மண்டல வாரியாக பிரிப்பதில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு மாவட்டத்திலும் நலங்குத்துறை நடவடிக்கை, பரிசோதனை நிலவரம், குணமடைவோர் விகிதம், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மண்டலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. சிவப்பு மண்டலங்களில் 7 நாட்களில் புதிய தொற்று இல்லாத காரணத்தினால் அவைகள் ஆரஞ்சு மண்டலமாக தற்போது மாற்றப்பட்டிருக்கிறது.

அதன்படி தமிழகத்தில் நேற்று வரை சிவப்பு மண்டலத்தில் இருந்த 26 மாவட்டங்களின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது. தற்போது தமிழகத்தில், சென்னை, மதுரை, விருதுநகர், நாமக்கல், தஞ்சாவூர் , செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், வேலூர்,  ராணிப்பேட்டை, திருவாரூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. இந்த மாவட்டங்கள் கூடுதல் கவனம் தேவைப்படும் இடங்களாகும்.

அதேபோல், நேற்று வரை 10 மாவட்டங்கள் மட்டுமே ஆரஞ்சு மண்டலத்தில் இருந்த நிலையில் இன்று 24 மாவட்டங்களாக அதிகரித்துள்ளன. அதில், தேனி, தென்காசி, நாகை, திண்டுக்கல், விழுப்புரம், கோவை, கடலூர், சேலம், கரூர், தூத்துக்குடி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், நெல்லை,  நீலகிரி, சிவகங்கை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை, தருமபுரி, திருச்சி ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

தமிழகத்தில் இதுவரை தொற்று கண்டறியப்படாத மாவட்டமாக கிருஷ்ணகிரி மட்டும் பச்சை மண்டத்தில் இடம் பெற்றிருந்து கொண்டிருக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.