Show all

பார்க்காத பயிறும் கேட்காத கடனும் பாழ்

  • பயிறும் கேட்காத கடனும் பாழ். என்று கிராமியப் பழமொழி உண்டு.

பொதுத் துறை வங்கிகளில் கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாதோர் பட்டியலில் 27 விழுக்காடு பங்களிப்புடன் இந்திய மாநில வங்கி முதலிடத்தில் உள்ளது. கடந்த மார்ச் 31 நிலவரப்படி 1,762 பேர் இந்திய மாநில வங்கியில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத தொகை ரூ.25,104 கோடியாகும். இதற்கு அடுத்தபடியாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் 1,120 பேர் கடன்பெற்று ரூ.12,278 கோடியை திருப்பிச் செலுத்தாமல் உள்ளனர்

பாமர மக்களுக்கு கடன் தாராது வங்கிகள்; அப்படியும் மீறி சிலர் கூடுதல் முயற்சியில் கடன் பெற்று விடுவதுண்டு. அவர்களை யெல்லாம் தொடர்ந்து கவனித்து கடன் பாக்கிகடைள வசூலித்து விடும் வங்கிகள்.

ஆனால் பெரு நிறுவனங்களை பார்க்காமலும் தொடர்கவனிப்பு மேற் கொள்ளாமலும் வங்கிகள் வாராக் கடனைப் பெருக்கிக் கொள்கின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.