Show all

பார்த்தீனியம் என்னும் அமெரிக்க நச்சுச் செடிகளை அகற்ற விழிப்புணர்வு பரப்புரை

கன்னியாகுமரி மாவட்டத்தில், வேளாண்பெரு மக்களுக்கு பார்த்தீனியம் நச்சுகளை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் நிலையத்தின் சார்பில், வேளாண்பெரு மக்கள், பொதுமக்களுக்கு பார்த்தீனியத்தின் தீமைகள் குறித்தும், அது அழிக்கப்பட வேண்டியதன் தேவை குறித்தும் தொடர் பரப்புரை வழங்கப்பட்டு வருகிறது.

பார்த்தீனியம் என்ற நச்சுகள் 1955 ஆம் ஆண்டு வெளிநாட்டு தானியங்களுடன் இந்தியாவிற்குள் இறக்குமதியானது. இந்த நச்சுகள் அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. எல்லா வகையான சூழ்நிலையையும் தாங்கி வளரும் இச்செடி தற்போது இந்தியா முழுவதும் பரவி வேளாண் நிலங்களை பெருமளவில் பாதித்ததுடன் மனித நலத்திற்கும் தீங்கு விளைவித்து வருகிறது.

இந்த நச்சுக் களையை ஒழிப்பதன் தேவையை வேளாண்பெரு மக்கள், பொதுமக்களுக்கும் உணர்த்தும் வகையில் ஆக. 22 அன்று வரை பார்த்தீனியம் ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் ஒருகட்டமாக ராமபுரம் கிராமத்தில் வேளாண்பெரு மக்கள், பொதுமக்களுக்கு பார்த்தீனியம் நச்சுக் களையை அகற்றும் முறை, அகற்றா விட்டால் அது ஏற்படுத்தும் தீமைகள் ஆகியவற்றை திருப்பதிசாரம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் செயல் முறை விளக்கமளித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.