இந்தியாவில் தடுக்கி விழுந்தால் சீனத் தயாரிப்புகள் மீதுதான் விழவேண்டும் என்கிற அளவிற்கு சீனப்பொருட்கள் இந்தியாவில் விற்பனையாகி வருகின்றன. இந்த நிலையில், சீனச் செயலிகளை நிறுவல் நீக்க ஒரு செயலி அறிமுகம் செய்யப்பட்டு, இந்தியாவில் பேரறிமுகமாகி வருகிறது. 19,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: நமது செல்பேசியில் இருக்கும் சீன நிறுவனங்களின் செயலிகளைக் கண்டறிந்து, நிறுவல் நீக்கும் வகைக்கான ஒரு செயலி இந்தியாவில் பேரறிமுகமாகி வருகிறது. இந்தியாவில் தடுக்கி விழுந்தால் சீனத் தயாரிப்புகள் மீதுதான் விழவேண்டும் என்கிற அளவிற்கு சீனப்பொருட்கள் விற்பனையாகி வருகின்றன. ஹரோ பேனாவில் தொடங்கி- குழந்தைகள் விளையாட்டுப் பொருட்களில் இருந்து, கணினிப் பொருட்கள், மலிவுவிலை மிடுக்குப் பேசிகள் என, நமது பயன்பாட்டில் சீனப் பொருட்கள் பெரும்பான்மை இடம்பிடித்துள்ளன. அதே அளவிற்கு சீனா பொருட்களின் மீது எதிர்ப்பு மனநிலையும் இந்தியாவில் பரவலாக சமூக அக்கரையாளர்களில் காணப்படுகிறது. இந்த நிலையில் சீனச் செயலிகளை நிறுவல் நீக்க ஒரு செயலி அறிமுகம் செய்யப்பட்டு இந்தியாவில் பேரறிமுகமாகி வருகிறது. இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து, வருடி பித்தானை அழுத்தினால் நம் செல்பேசியில் இருக்கும் டிக் டாக், கேம்ஸ்கேனர், ஜின்டர் போன்ற சீன நிறுவன செயலிகளை பட்டியலிடும். நாம் அதனை எளிதில் நீக்கிக்கொள்ளலாம். தற்போது பிளே ஸ்டோரில் இவற்றை 10 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். டாஸ்மாக்கை திறந்து வைத்துக் கொண்டு, அரசு சாராய வணிகம் செய்துகொண்டே, குடி குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும் என்று விளம்பரம் செய்வதைப் போல, நமது விரல்களை பெரும்பான்மை நேரம் நாட்டியமாட விட்டு, நாம் கொண்டாடி மகிழும் நமது மலிவுவிலை சீனா மிடுக்குப் பேசிகளிலிருந்து நிறுவல் நீக்குவோம் சீனச் செயலிகளை.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



