Show all

அதிர்ச்சி காட்டாத தேர்தல் ஆணையம்! சுயேட்சை வேட்பாளரின் கையிருப்பு ரூபாய் 1,760,000,000,000 கடன் ரூ.4,000,000,000,000.

சுயேட்சை வேட்பாளரின் கையிருப்பு ரூபாய் 1,760,000,000,000 கடன் ரூ.4,000,000,000,000. தேர்தல் ஆணையம் பரிசீலனை முடித்து, பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட பச்சை மிளகாய் சின்னம் வழங்கியிருக்கிறது அதிர்ச்சி அடையாமல், தேர்தல் ஆணையம். ஆதனால் தமிழகம் தற்போது அதிர்ச்சியில்!

20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகம் முழுவதும்,  நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பு மனு பதிகை முடிந்து, கட்சிகளின் சார்பாக தேர்தல் கருத்துப் பரப்புதல்கள் சூடாகி வரும் நிலையில், ஒரு சூடான செய்தி தமிழகத்தில் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. 

பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் மோகன்ராஜ் என்பவர் வேட்பு மனு பதிகை செய்திருந்தார். அந்த வேட்பு மனுவில், தமது கையிருப்பு ரொக்கப்பணம் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமது கடனாக உலக வங்கித் தந்திருக்கும் 4 லட்சம் கோடி ரூபாய் எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம்தான் தற்போது தமிழகத்தை சூடு படுத்தியுள்ள சம்பவமாகும்.

அவருக்கு சொத்து இல்லையாம் ; வருமான வரி செலுத்துவதில்லையாம் ;ஆனால் கையிருப்பாக 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அவரது மனுவை பரிசீலனை செய்து, தேர்தலில் போட்டியிட பச்சை மிளகாய் சின்னமும் வழங்கியுள்ளது. தேர்தல் ஆணையம். அவர் வைத்திருக்கும் கையிருப்பு பணத்தில் பழைய ஆயிரம், ஐநூறு ரூபாய் தாள் கலந்திருக்குமா? ஒரு தனி நபருக்கு உலக வங்கி கடன் தருகிறதா? சொத்து எதுவும் இல்லாமல் எப்படி நான்கு இலட்சம் கோடி கடன் பெற முடிந்தது? என்றெல்லாம் கேள்விகள் மக்களை குறிப்பாக செய்தியாளர்களை பரபரக்க வைத்துள்ளது. விரைவில் அனைத்து தகவல்களும் தோண்டியெடுக்கப் படும்.

ஜனதா கட்சியை சேர்ந்த, மறைந்த ஜெபமணியின் மகன் தான் இந்த பெரம்பூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் மோகன்ராஜ் என்று அறியப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,111.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.