உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளாராம். 03,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: உத்திரபிரதேச மாநிலம் கதம்பூர் பகுதியை சேர்ந்த 6 அகவை சிறுமி, வெடித்திருவிழா அன்று பட்டாசு வாங்குவதற்காக, மாலை நேரத்தில் தனியாக பட்டாசு கடை தேடி வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும், சிறுமி வீட்டிற்கு வராததால், பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி, அங்குல், பீரன் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காவல்துறை வெளியிட்ட தகவல் இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதாக உள்ளது. அதாவது, பரசுராம் என்பவருக்கு பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகிய நிலையில், குழந்தை இல்லாமல் இருந்தாராம். இதனால் அவர் அங்குல், பீரன் ஆகிய இரண்டு பில்லி, சூனிய மாயவாதிகளிடம் குழந்தை பாக்கியம் வேண்டி பூஜை நடத்த கூறியுள்ளார். இதையடுத்து, 6 அகவை சிறுமியை கடத்திய பில்லி, சூனிய மாயவாதிகள், இடுகாட்டில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், சிறுமியின் கல்லீரலை உடலில் இருந்து எடுத்து, பூஜை செய்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து அறிந்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளாராம்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



