Show all

வெள்ளிக்கிழமை அதிமுக ஆலோசனை கூட்டம்! சனிக்கிழமை அமித்சா தமிழகம் வருகை. பீகார் கனவில் தமிழக பாஜகவினர்

அதிமுகவை விட பாஜக அதிக இடம் பெற்று. எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வர் பதவியும், பீகாரில் பாஜகவிற்கு இரண்டு துணை முதல்வர்கள் போல எல்.கணேசனுக்கும், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், வி.பி.துரைசாமி, முருகானந்தம் உள்ளிட்டோருக்கும் ஐந்து துணை முதல்வர்கள் பதவிகள் பாஜகவிற்கு கிடைக்கலாம் என்றும் தமிழக பாஜகவினர் காணும் கனவுக்கு ஆதரவாக அமித்சா வருகை; அதிமுக அலோசனை கூட்டம். 

03,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா தமிழகம் வரும் நிலையில் பாஜகவுடனான கூட்டணி தொடர்பாக விவாதிக்க அதிமுகவின் ஆலோசனை கூட்டம் வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பான கட்சிகளின் வியூகங்கள், நடவடிக்கைகள் விறுவிறுப்படைந்துள்ளன. உள்துறை அமைச்சர் அமித்சா வெள்ளிக்கிழமை தமிழகம் வருகிறார்.

அமித்சாவின் வருகையை முன்வைத்து பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன. இதுவரை வெளியே வராத முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.க.அழகிரி இப்போது திடீரென ஊடகங்களிடம் பேசி வருகிறார். பாஜகவின் ஆதரவுடன் கலைஞர் திமுகவை அழகிரி தொடங்க வாய்ப்பிருப்பதாக பரவலாக கருத்து நிலவுகிறது.

அதேபோல் அரசியலுக்கு வர விருப்பமே இல்லாத நடிகர் இரஜினிகாந்தை அமித்சா சந்திப்பாரா? என்கிற கேள்வியும் வலம் வருகிறது. 

அத்துடன் அதிமுகவுடனான கூட்டணியை அமித்சாவின் பயணம் உறுதி செய்யலாம் எனவும் கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் 50 முதல் 60 இடங்களை பாஜக கேட்கவும் வாய்ப்பிருக்கிறது. ஒரு பக்கம் கணிசமான இடங்களில் போட்டியிடுவது; இன்னொரு பக்கம் கூட்டணி கட்சியான அதிமுகவின் வெற்றிக்கு குழிபறிப்பது என்கிற பீகார் வாய்ப்பாட்டையும் பாஜக அரங்கேற்ற வாய்ப்பிருக்கிறது.

இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளில் அதிமுகவின் முதன்மை ஆலோசனை கூட்டம் சென்னையில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜகவின் வியூகங்கள், நெருக்கடிகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இதில் விவாதிக்கப்படக் கூடும் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.

அடுத்த பீகாராக தமிழகம் அமையும் என்பதாக பாஜக தரப்பினர் கனவில் மிதந்து வருகின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தலில் பிகார் போலவே- திமுக இராஷ்டிரிய தளம் போல தனிக்கட்சியாக  அதிக இடம் பெற்றாலும், பாஜக அதிமுக கூட்டணி அதை விட அதிக இடம் பெற்றும், பீகார் போலவே அதிமுகவை விட பாஜக அதிக இடம் பெற்றும், எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வர் பதவியும், பீகாரில் பாஜகவிற்கு இரண்டு துணை முதல்வர்கள் போல எல்.கணேசனுக்கும், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், வி.பி.துரைசாமி, முருகானந்தம் உள்ளிட்டோருக்கும் ஐந்து துணை முதல்வர்கள் பதவிகள் பாஜகவிற்கு கிடைக்கலாம் என்றும் தமிழக பாஜகவினர் கனவு அமைந்துள்ளது. 

இந்தியாவில் பார்ப்பனிய பணியா குழுவினரால் செல்லாக்காசாக்கப்பட்டுவிட்ட காங்கிரசுக்கு பீகாரில் அதிக இடங்கள் கொடுத்து வெற்றி வாய்ப்பை ரஷ்ட்டிரிய ஜனதா தளம் இழந்தது போல தமிழகம் அமைந்து விடக்கூடாது என்பதில் திமுக விழித்துக் கொண்டு கவனமாக இருக்கிறது. திமுக 200 மேற்பட்ட தொகுதிகளை தமதாக்கிக் கொண்டு வராலாற்று வெற்றியை முன்னெடுக்கும் என்பதே உண்மை என்கின்றனர் அரசியல் திறனாய்வாளர்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.