Show all

இவரும் கவனிக்கத் தக்கவரே! நடுவண் அரசில் இணை அமைச்சராக பொறுப்பேற்கவுள்ள சந்திர சாரங்கியின் இருவேறு தோற்றங்கள்.

ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு: வன்முறை, கொலை, கலவரம் ஆகிய தோற்றத்தை வெளிப்படுத்தியவர். ஹிந்துக்களுக்கு: எளிமையானவர், நேர்மையானவர், சமூக சேவகர் ஆகிய தோற்றத்தை வெளிப்படுத்தியவர். அதாவது ஹிட்லர்- இராஜபக்சே போன்றவர்.

18,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சமூக வலைத்தளங்களில் பாஜகவினர் பிரதாப் சந்திர சாரங்கி என்கிற அமைச்சரை எளிமையானவர், நேர்மையானவர், சமூக சேவகர். என்று கொண்டாடிவருகின்றனர். 

ஆனால் சில நாட்களுக்கு முன்பு வரை ஒடிசா மாநிலத்தைத் தாண்டி, பிரதாப் சந்திர சாரங்கியை வெளியில் யாருக்கும் தெரியாது. ஆனால், தேர்தல் முடிவு வெளியான இந்த ஒரு கிழமையில், சமூக வலைத்தளவாசிகள் கொண்டாடும் நபராக அவர் மாறியுள்ளார்.

அதற்குக் காரணம், அவர் குறித்து வெளியான புகைப்படங்கள். அதை வைத்து எளிமையானவர், நேர்மையானவர், என்று பல்வேறு பாராட்டுகள். பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவருக்கு நடுவண் பாஜக அரசு நடுவண் இணை அமைச்சர் பதவி கொடுத்துள்ளது. 

இவ்வளவு பிரபலமான சாரங்கியின் கடந்தகால பாதை மிகவும் அதிர்ச்சிகரமாக இருக்கிறது. எளிமையானவர் என்று இவர் மீது கட்டமைக்கப்படும் பிம்பம் முற்றிலும் போலியானது என்பதை உணர்த்துகிறது. ஒடிசாவில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்துத்துவா கும்பல் ஒன்று ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின் மற்றும் அவருடைய 2 மகன்களை எரித்துக் கொன்றது. ஒடிசாவையே மிகுந்த பரபரப்புக்குள்ளாக்கிய இந்த சம்பவத்தை நிகழ்த்தியது பஜ்ரங் தள் என்கிற அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர்தான் இந்த பிரதாப் சந்திர சாரங்கி.

உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய இச்சம்பவத்தில், ஆதாரங்கள் இல்லை என்று விசாரணை முடிக்கப்பட்டுவிட்டது. பின்னர் நடந்த ஆய்வில் தாரா சிங் உள்பட 13 பேரைக் குற்றவாளி என 16 ஆண்டுகளுக்கு முன்ப கட்டாக் அறங்கூற்றுமன்றம் அறிவித்தது.

அதில், முதன்மைக் குற்றவாளி தாரா சிங்குக்கு தூக்குத் தண்டனையும், மற்ற 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்தத் தண்டனையை எதிர்த்து பஜ்ரங் தள் குற்றவாளிகள் ஒரிசா உயர் அறங்கூற்றுமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். தாரா சிங்குக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிய நடுவண் குற்றப் புலனாய்வுத்துறை மனுவை நிராகரித்த அறங்கூற்றுவர்கள், அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படுவது சாத்தியம் என்று குறிப்பிட்டனர்.

அதேவேளையில், தாரா சிங்குக்கு ஒரிசா உயர் அறங்கூற்றுமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து அவர்கள் தீர்ப்பளித்தனர். இதற்கிடையில் பிரதாப் சந்திர சாரங்கி தூண்டுதலின் பேரில் இந்த சம்பவம் நடந்துள்ளதாகப் பலரும் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து ஒடிசாவைச் சேர்ந்த இதழியலாளர்  ஒருவர் கூறுகையில்,  நாட்டில் நடைபெறும் மத மாற்றங்களுக்கு கிறிஸ்துவ மிஷனரி தீய சக்திகளே காரணம் எனக் கடுமையாக விமர்சித்தவர் பிரதாப் சந்திர சாரங்கி. பாதிரியார் ஸ்டெயின்ஸ் மீதும் அவரது குழந்தைகள் படுகொலை செய்யப்பட்ட போதும் கூட தனது கருத்துக்கள் மூலம் வன்முறையைத் தூண்டும் விதத்திலேயே அவர் பேசியதற்கான ஆதாரங்கள் உள்ளன.

அதன் பின்னர் பதினேழு ஆண்டுகளுக்கு முன் பஜ்ரங் தள் உட்பட ஹிந்து வலதுசாரிக் குழுக்கள் ஒடிசாவில் கலவரத்தை உருவாக்கியது. இதில் திட்டமிட்ட தாக்குதல், கலகம் ஏற்படுத்துதல், அரசாங்க சொத்துக்களைச் சேதப்படுத்துதல் ஆகிய வழக்குகளின் அடிப்படையில் சாரங்கி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்த சம்பங்கள் பற்றி எந்த ஊடங்களும் பேசாமல், அவர் குடிசையில் வாழ்கிறார், மிதிவண்டியில் வருகிறார், தெருக்குழாயில் குளிக்கிறார், எளிமையாக இருக்கிறார் என்று புகழ் பாடிவருகின்றன. சமூக வலைத்தளங்களிலும் அவரின் உண்மை முகம் தெரியாமல் பாஜக ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் பரப்பும் பொய்த்தகவலை வைத்து கொண்டாடிவருகின்றனர்.

இந்நிலையில், அவருக்கு நடுவண் இணை அமைச்சர் பதவி வழங்கியதற்காக அவரது தொகுதியில் அவரது தொண்டர்கள் வெடி வெடித்துக் கொண்டாடிய கொண்டாட்டங்களில், துப்பாக்கியில் வானத்தை நோக்கிச் சுட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படி மோசமான ரத்தக்கறை படிந்திருக்கும் வரலாறு கொண்ட நபரை எளிமையானவர், நேர்மையானவர் என்று முன்னிறுத்துவது பாஜகவின் சிந்தாந்தம் என்பதை இதன் மூலமும் நிலை நாட்டியுள்ளது பாஜக.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,170.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.