புதிய கல்விக் கொள்கை வரைவு திட்டத்தில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, ஹிந்தி பேசாத மாநிலங்களிலும் ஹிந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு, பதவியேற்று இரண்டாவது நாளிலேயே மோடி பாஜக அரசு அடாவடியைத் தொடங்கியுள்ளது. 18,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நேற்று பதவியேற்று இன்று இரண்டாவது நாளில் ஹிந்தி பேசாத மாநில மக்கள் மீது ஹிந்தித் திணிப்புக்காக புதிய கல்விக் கொள்கையை அறிவித்திருக்கிறது பாஜக மோடியின் நடுவண் அரசு. தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஹிந்தி திணிப்பிற்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கீச்சுவில் #StopHindiImposition, #TnAgainstHindiImposition என்ற சந்திப்பு எடுப்பு தேசிய அளவில் தலைப்பாகி வருகிறது. மோடியின் அடாவடி எங்கே போய் முடியும் தெரியவில்லை. தமிழக மக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் இலங்கை அதிபர் சிறிசேனா மோடியை இலங்கைக்கு சுற்றுப் பயணம் செய்யுமாறு கேட்டு, தனது மகிழ்சியைப் பதிவு செய்திருக்கிறார். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,170.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



