Show all

உண்மையான தேசியம்! அஞ்சல் துறையில் அனைத்து மொழிகளுக்கும் உரிமை மீட்டுத் தந்த தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள்.

ஹிந்தி என்ற ஒற்றை மொழியில் அதிகாரம் செய்ய முயலும் பாஜகவா? அனைத்து மாநில மொழிகளுக்கும் அஞ்சல் துறையில் உரிமையை மீட்டுத் தந்த தமிழக கட்சிகளா? யாரடா தேசியவாதி என்ற கேள்வி இணையத்தை கலக்கி வருகிறது.

01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அஞ்சல் துறையில் அனைத்து மொழிகளுக்குமான உரிமை மீட்கப் பட்டது. ஞாயிறன்று அடாவடியாக ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் மட்டும் நடத்தப் பட்ட அஞ்சல்துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாக நடுவண் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார். மேலும், இனி வரும் நாட்களில், தமிழ் உட்பட அனைத்து மாநில மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வு நடத்தப்படும் தெரிவித்துள்ளார்.

அஞ்சல் துறை போட்டி தேர்வுகள், தமிழ் உட்பட, அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்பட்டு வந்தன. இனிமேல், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் மட்டுமே நடத்தப்படும் என அறிவித்தது மக்களாட்சி மாண்பை குழிதோண்டி புதைக்கும் பாஜக அரசு. 

1.இதற்கு தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்பு. 2.மதுரைக்கிளை உயர்அறங்கூற்றுமன்றம் தேர்வு முடிவு வெளியிட வழங்கிய தடை. 3.பாராளுமன்றத்தில் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்த கிளர்ச்சி ஒட்டு மொத்த இந்தியாவிற்குமான மாநில மொழிகளின் உரிமையை அஞ்சல் துறையில் மீட்டு தந்துள்ளது. 

இனி தொடர்ந்து மக்களாட்சி மாண்பை காக்க தமிழகம் முன்னணியில் நிற்கும் காலம் கனிந்திருக்கிறது. இந்தியாவில் இனி எட்டாவது பட்டியலில் உள்ள 22 மொழிகளும் அனைத்து அதிகாரங்களையும் பெறும்.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,216.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.