அடுத்த வெள்ளிக் கிழமை திரைக்கு வரவுள்ள, சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள, ஏ1 திரைப்படத்தின் இரண்டாவது பட விளம்பரம் தற்போது வெளியாகி ரசிகர்களால் பாராட்டு பெற்று வருகிறது. 31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சந்தானம் நடித்து வெளியாகவிருக்கும் படம் ஏ1. சந்தானத்திற்கு, தாரா அலிசா கதைத் தலைவியாக நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் கே.ஜான்சன். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். முழுக்க நகைச்சுவை அதிரடி படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தின் இரண்டாவது பட விளம்பரம் தற்போது வெளியானது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப் பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் படம் அடுத்த வெள்ளிக் கிழமை திரைக்கு வருகிறது. தன் இரசிகர்களை நீண்ட நாள் பட்டினி போட்ட சந்தானம், வயிறு வலிக்க சிரிக்க வைக்கப் போகிறார் என்று தெரிவிக்கப் படுகிறது. படம் வெளியாகட்டும் பார்க்கலாம். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,215.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



