நாளது 30,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5056 அன்று பிறந்த, நமது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு, இன்று 66வது பிறந்த நாள். ஆங்கில நாட்காட்டி அடிப்படையில் நேற்றும் கொண்டாடலாம். முதல்வர் அவர்களுக்கு அவரது கடமையை நினைவூட்டி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் நடிகை கஸ்தூரி நம்மோடு. 30,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் 66-வது பிறந்த நாளுக்கு தலைமைஅமைச்சர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். மேலும் ஊரடங்கில், வெளிமாநில தொழிலாளர்களின் நலனில் தமிழக அரசு எடுத்து வரும் அக்கறையும், முயற்சியும் பாராட்டுக்குரியது, வேறு எந்த மாநிலத்தையும்விட நம் மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நடிகை கஸ்தூரி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முகநூல் பதிவில் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளதாவது:- எடப்பாடி பழனிசாமி அவர்களின் பெயரை கேட்டதும் எனக்கு தோன்றுவது- எளிமை. மிக மரியாதையாக, தோழமையுடன் பேசுவார். பொது வாழ்க்கையும் பதவியும் அவரின் அந்த அடிப்படை பண்பை மாற்றவில்லை. அவர்கள் தமிழகத்தின் முதல்வராக தலைமையேற்ற பொழுது, இரண்டு கிழமை கூட தாக்கு பிடிக்கமாட்டார் என்று பலர் பந்தயம் கட்ட தயாராக இருந்தார்கள். அத்தனை சிக்கல்களையும் சமாளித்து, பல சோதனைகளைக் கடந்து, இரண்டு ஆண்டு ஆட்சியில் எதிர்க்கட்சியினர் கூட, அட பரவாயில்லையே! என்று வியக்குமளவுக்கு நல்ல பெயரை வாங்குவது எளிமையல்ல. எல்லாவற்றையும் விட பெரிய சோதனை இப்போது. இந்தக் கொரோனா காலம் எடப்பாடியாரின் தலைமைக்கு ஒரு அக்னி பரீட்சை. இரண்டு மாதமாக எடுத்த நல்ல பெயரையெல்லாம் இப்பொழுது தக்க வைத்து கொள்வாரா, இல்லை 'தண்ணியில்” கரைத்துவிடுவாரா என்று இதோ இன்று தெரிந்துவிடும். அந்த வகையில், இந்த பிறந்தநாள் எடப்பாடியாரின் மறக்க முடியாத பிறந்த நாள். அவருக்கும் தமிழக மக்களுக்கும் நல்ல நாளாக அமையட்டும்!" என்று பதிவிட்டுள்ளார். டாஸ்மாக் கடைகளை திறப்பதில் விருப்பம் இல்லாத கஸ்தூரி ‘தண்ணி’ என்ற சொல்லை அழுத்தமாகக் குறிப்பிட்டு தனது வாழ்த்துப் பதிவினை வெளியிட்டுள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



