27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சரத் கமல், பங்காரு அடிகளாருக்கு பத்மசிறி விருதை இந்தியக் குடிஅரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார். இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு நடுவண் அரசு விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மசிறி ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் இரண்டு மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன. பத்ம விபூஷண் 4 பேருக்கும், பத்ம பூஷண் 14 பேருக்கும், பத்மசிறி 94 பேருக்கும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி குடிஅரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்றது. பத்ம விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் முதல்கட்டமாக இன்று 56 பேருக்கு குடிஅரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி கவுரவித்தார். தமிழகத்தைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜ், மதுரை சின்னப்பிள்ளை, மருத்துவர் ரமணி, மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி, டிரம்ஸ் சிவமணி, டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல், மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் ஆகியோருக்கு பத்மசறி விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், பங்காரு அடிகளார், சரத் கமல், டிரம்ஸ் சிவமணி ஆகியோர் இன்று குடிஅரசுத் தலைவரிடம் பத்மசிறி விருது பெற்றனர். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,088.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.