நீட் தேர்வே வேண்டாம் என்கிறது தமிழகம். அடாவடியாக, விடாப்பிடியாக, மழலையர் கல்வி பெற்ற குழந்தையிடம் மருத்துவக் கல்விக்கு நுழைவுக் தேர்வு நடத்த அனுமதித்திருக்கிறது பாஜக நடுவண் அரசு. அதன் விளைவு குளறுபடி. குளறுபடி. இந்த அழகில் அனைத்து மாணவர்களும் நீட் தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறது ஒரு கூமுட்டை நம்மை கூமுட்டையாக்க. 22,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இனி வரும் காலங்களில் நீட் தேர்வை, நடுவண் இடைநிலைக் கல்வி வாரியத்திற்கு மாற்றாக தேசிய தேர்வு முகமை நடத்தும் என நடுவண் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்து இந்த முறை நீட் தேர்வை தேசிய தேர்வு முகமையிடம் நடத்தும் பொறுப்பு விடப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமையிடமும் குளறுபடிகளுக்கெல்லாம் பஞ்சம் இல்லை. நேற்று ஒரு தேர்வறை அனுமதி. இன்று அது செல்லாது என்று கூறி புதிய தேர்வறை அனுமதியை இயங்கலையில் தரவிறக்கம் செய்து கொள்ள உத்தரவு. புதிய தேர்வறை அனுமதியில் தேர்வு எழுதுமிடம் வேறு ஊருக்கு மாற்றம். தேர்வறை அனுமதி மட்டும் போதாது நிழல்படம் ஒட்டிய அடையாள அட்டையும் வேண்டும். இப்படி ஏராளம். நீட் தேர்வை நடத்துவதற்கு தகுதியான அமைப்பே கண்டுபிடிக்க முடியாமல், ஆண்டாண்டுக்கு வெவ்வேறு அமைப்புகளிடம் மாற்றி மாற்றிக் கொடுக்கிற நிலையில், நீட் தேர்வை எப்படி தகுதித் தேர்வு என்று சொல்ல முடியும். தமிழக வரிப் பணத்தில், கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகளில் வட மாநில மாணவர்களுக்கும் நடுவண் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் பெரும்பான்மையான இடங்களைத் தாரை வார்ப்பதற்கே இந்த நீட் தேர்வு. எத்தனை இடங்கள் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கிறதோ அத்தனை பேர்களுக்கே தேர்ச்சி என்பதற்கே நீட் தேர்வு. அப்புறம் எப்படி தேர்வில் கலந்து கொள்கிறவர்கள் அனைவருக்கும் வெற்றி பெற இந்தக் கூமுட்டை வாழ்த்துச் சொல்கிறது என்ற கிண்டல் இணையத்தில் தீயாகி வருகிறது. முடியும் அத்தனை மாணவர்களும் வெற்றி பெற! தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில், தமிழக அரசின் பள்ளிகளில், தமிழக மொழியான தமிழ்வழிக் கற்றவர்களுக்கு மட்டுமே இடம் என்று சொன்னால் தேர்வில் கலந்து கொள்கிற அனைவருக்கும் வெற்றி கிடைக்கும். ஆம் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான பாடப்பிரிவு எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் இடம் வழங்க அரசு மருத்துக் கல்லூரிகளில் இடம் இருக்கிறது. அதைச் தங்கள் கட்சித் தலைமையை நிர்பந்திக்கும் கெத்து இருக்கிறதா இந்த கூமுட்டைக்கு என்றும் இணையம் கலாய்க்கிறது இந்த அனைத்து மாணவர்களும் நீட்டில் வெற்றி பெற வாழ்த்து சொன்ன இந்த எச்.இராஜாவை. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,143.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.