முன்னால் தலைமை அமைச்சர் இராஜிவ்காந்தி தற்போது காங்கிரசை முன்னெடுக்கும் இராகுலுக்கு அப்பாவாக இருக்கலாம். இராகுலை அசிங்கப் படுத்துகிறேன் என்று இராகுலின் அப்பாவை அசிங்கப் படுத்துவது நாகரீகமரபு அல்ல. ஆனால் அதனைச் செய்து கொண்டிருக்கிறார் மோடி தனது கருத்துப் பரப்புதலில். அருவெறுக்கிறார்கள் சான்றோர்கள். 22,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: முன்னாள் தலைமைஅமைச்சர் இராஜீவின் வாழ்க்கை முதல்தர ஊழல்வாதியாகவே முடிந்தது என தனது கருத்துப் பரப்புதல் மேடையில் பேசி, மோடி அருவெறுப்பு கருத்துப்பரப்புதல் யுக்தியைக் கையில் எடுத்து இருக்கிறார். 'உங்களின் தந்தை' அவரது விசுவாசிகளால் தூய்மையானவர் எனப் புகழப்படலாம். ஆனால் அவரது வாழ்க்கை முதல்தர ஊழல்வாதி என்றே முடிந்தது என்று பேசியிருக்கிறார் மோடி. இராஜிவ்காந்தியின் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன அல்லது இல்லை. இராஜிவ் மீதான குற்றங்குறைகளை தெரிவிக்கும் போது இராஜிவ் காந்தி குற்றவாளி என்றுதான் தெரிவிக்க வேண்டும். 'உங்களின் தந்தை' என்று குறிப்பிட்டு பிறப்படிப்படையாக குற்றச்சாட்டு வைப்பது அடிப்படை மனிதப் பண்பேயில்லை. மோடியின் இந்த வகையான கருத்துப் பரப்புதல் யுக்தியை சான்றோர் பெருமக்கள் அருவெறுக்கிறார்கள். -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,143.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.