தமிழகத்தை அச்சுறுத்திய போனி புயல் ஒடிசாவை நோக்கி நகரத் தொடங்கியதும் ஆந்திராவின் அமராவதி நகரில் உள்ள தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் 'நிகழ்நேரஆளுமை அமைப்பு' (Real Time Governance Society) எனப்படும் அமைப்பின் உதவி ஒடிசா அரசுக்கு வழங்கப்பட்டது. இந்த முன்னெச்சரிக்கை உதவியால் உயிர்ச் சேதம் பெருமளவு தவிர்க்கப் பட்டது. 21,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒடிசாவைத் தாக்கிய போனி புயலால் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள், தொலைப்பேசி கோபுரங்கள் சாய்ந்த போதும் உயிர்ச்சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,142.
ஆந்திராவின் அமராவதி நகரில் உள்ள தலைமைச் செயலகத்தில் செயல்பட்டு வரும் 'நிகழ்நேரஆளுமை அமைப்பு' எனப்படும் அமைப்பின் உதவி ஒடிசா அரசுக்கு வழங்கப்பட்டது.
இந்த மையத்தின் நவீன தொழில்நுட்ப வசதிகள் போனி புயலின் போக்கை துல்லியமாகக் கணித்தன. உயிர்ச் சேதங்களைத் தவிர்க்கவும் பாதுகாப்பை அதிகரிக்கவும் மீட்பு நிவாரணப் பணிகளை துரிதப்படுத்தவும் உதவிய இந்த தொழில்நுட்பம் மூலம் புயலின் ஒவ்வொரு நகர்வும் கண்காணிக்கப்பட்டு உடனுக்குடன் தகவல்கள் பரிமாறப்பட்டன.
ஒடிசா பக்கம் புயல் நகர்கிறது என்பதை அறிந்த அடுத்த நிமிடமே ஒடிசா அரசுடன் 'நிகழ்நேரஆளுமை அமைப்பு' வல்லுனர்கள் தொடர்பில் இருந்தனர். அரசுக்கு எச்சரிக்கைகளை விடுத்த வண்ணம் புலனம் செயலி மூலம் முதன்மை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தகவல் அனுப்பிக் கொண்டிருந்தனர்.
இதன் காரணமாக புயல் தாக்கிய பின்னர் பெருமளவில் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு தாக்கிய புயலில் சுமார் 10,000 பேர் உயிரிழந்தனர். ஆனால் இந்த முறை பல லட்சம் பேர் முன்கூட்டியே பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டதும் புயல் தாக்கத்தை கட்டுப்படுத்தியுள்ளது. ஆந்திர அரசின் இந்த உதவிக்கு ஒடிசா அரசு நன்றி தெரிவித்துள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.