கொரோனா பரவலைத் தடுப்பதற்கான, முடக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களுக்கு- குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 என்பதான நிவாரணத்தை முதல்-அமைச்சர் பழனிசாமி அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். 11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா பரவலைத் தடுப்பதற்கான, முடக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களுக்கு, தமிழக அரசின் நிவாரணமாக, முதல்-அமைச்சர் பழனிசாமி அவர்களால் சட்டபேரவையில் அறிவிக்கப்ட்டதாவது:- (!) தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூபாய் 1000 வழங்கப்படும். நடுவண் பாஜக அரசு ஏதாவது நிவாரணம் அறிவித்திருக்கிறதா என்று தேடலில் ஈடுபடவேண்டாம். அவர்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை ஐந்து மணிக்கு கைத்தட்டியும், மணியோசை எழுப்பியும் தங்கள் நிவாரணத்தை செலுத்தினார்களே அதற்குள் மறந்து விட்டதா? என்கிற பகடியாடல்கள் இணையத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றன.
(!) நடைபாதை வணிகர்களுக்கு பொது நிவாரண நிதி ரூ.1000 மற்றும் கூடுதலாக ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.
(!) குடும்ப அட்டைப்பொருள் கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க முன்அடையாள (டோக்கன்) முறையில் பொருட்கள் வழங்கப்படும்.
(!) ஆதரவற்றோருக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று உணவு வழங்கப்படும்.
(!) தானி (ஆட்டோ) தொழிலாளர்களுக்கு 17 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, சமையல் எண்ணெய் வழங்கப்படும்.
(!) தானி தொழிலாளர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும்.
(!) 100 நாட்கள் வேலை திட்டத்தில் 2 நாட்கள் கூடுதல் சம்பளம் வழங்கப்படும்.
(!) கொரொனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக ரூ.3,250 கோடி நிவாரண நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



