Show all

குழந்தைகளுக்கெதிரான தொடரும்சதி! கொல்கத்தாவில் தோண்ட தோண்ட சடலங்கள்; 14 குழந்தைகளின் உடல்கள்

18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கொல்கத்தா, ஹரிதேவ்பூரில் கட்டிடம் கட்டுவதற்காக, நிலத்தைத் தோண்டும் போது, வரிசையாக 14 குழந்தைகளை எடுத்து இருக்கிறார்கள். இதில் சில சிறு சிறு கருக்களும் கூட இருந்துள்ளது. இதனால் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதில் குழந்தைகளின் உடல் முழுக்க முழுக்க வேதிப்பொருள் தடவப்பட்டுள்ளது. அதோடு எல்லா குழந்தைகளும் தனித்தனியாக நெகிழிப் பைகளில் கட்டப்பட்டுள்ளது. இதில் தடவப்பட்ட வேதிப்பொருள் என்ன என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த உடல்கள் மருத்துவமனையில் இருந்து எடுத்து வரப்பட்டு புதைக்கப்பட்டு இருக்கலாமா என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, அருகாமையில் உள்ள மருத்துவமனையில் விசாரித்து வருகிறார்கள். கருக்கள் கூட இருப்பதால், வேறு எதாவது பிரச்சனை நடந்து இருக்கலாமா என்று விசாரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அங்கு காவல்துறையினர் தொடர் விசாரணையில் இறங்கி உள்ளனர். அதோடு அருகாமையில் உள்ள இடங்களில் குழி தோண்டி வருகிறார்கள். அங்கு உள்ள கண்காணிப்பு படக்கருவிகளை சோதித்து வருகிறார்கள். அங்கு இன்னும் அதிக சடலங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,899.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.