திருப்பதியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 06,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: திருப்பதியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முதல் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட அர்ச்சகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமிபார்வைக்காக நுழைவுச்சீட்டு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. இயங்கலையில் மட்டுமே திருப்பதி கோவில் சாமிபார்வைக்காக நுழைவுச்சீட்டு வழங்கப்படும் என கோயில் அறநிலையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் திருப்பதியில் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்று முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சித்தூர் ஆட்சியர் அறிவித்துள்ளார். இந்த 15 நாட்களுக்கு பகல் 11 மணிக்கு மேல் திருப்பதி பகுதியில் பொதுமக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை கடைகள், உணவகங்கள் திறந்திருக்கும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



