தற்போது கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வெற்றிலையோடு கடலை மிட்டாய் சேர்த்து ஏராளமானோர் சாப்பிட்டு வருகின்றனர். 05,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: தற்போது கொரோனாவிற்கு எதிரான யுத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வெற்றிலையோடு கடலை மிட்டாய் சேர்த்து ஏராளமானோர் சாப்பிட்டு வருகின்றனர். இதனால் தற்போது இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வழக்கத்தை விட வெற்றிலை, கடலை மிட்டாய் விற்பனை கூடியுள்ளதாக வணிகர் ஒருவர் தெரிவித்தார். சளிக்கு வெற்றிலையைக் கசாயம் காய்ச்சி குடிப்பது தமிழக மரபுதான். அன்றாடம் குறைந்து ஒரு கடலை மிட்டாய் சாப்பிடுவது நல்லது என்று குழந்தைகளுக்குக் கடலைமிட்டாய் கொடுக்கப்பட்டு வருவதும் தமிழக மரபுதான். தற்போது வெற்றிலையோடு கடலை மிட்டாய் சேர்த்து 10 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும் என கருதுவதால் கடலை மிட்டாய் விற்பனை வெகுவாக கூடியுள்ளதான செய்தி புதியது. பகிரவும், விரும்பவுமாக சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி கொண்டாடப்பட்டு வருகிறது. உணவியல் நிபுணர் ஒருவரும் வெற்றிலையோடு கடலை மிட்டாயை சேர்த்து 4 அகவைக்கு மேற்பட்டோர் சாப்பிடலாம், இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என்றார். கொரோனா ஆபத்தானது என்றாலும் கூட, நமது மரபு மீட்பை தன் அதிரடியால் எளிதாக சாதித்து வருகிறது. நம் முன்னோர்கள் எப்போது வெளியே சென்று வீட்டிற்கு வந்தாலும் கை, கால்களை கழுவி விட்டு வா என்று கூறுவது வழக்கம். அதேபோன்று வீட்டின் முன்பு சாணத்தை தெளித்து மாக்கோலம் போடுவது போன்ற நல்ல பாடுகளை நாம் மறந்து போனோம். ஆனால் இப்போது அதிலுள்ள இயல்அறிவைப் பார்த்து வியக்கின்றோம். வெற்றிலை, பூண்டு, மிளகு, இஞ்சி, தேன், மஞ்சள்தூள், ஏலக்காய் இவையெல்லாம் அதிகம் கொண்டாடப்பட்டு வருகிறது.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



