Show all

நலங்குத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு இல்லை! மனைவி, மகன், மாமனார், மாமியாருக்கு கொரோனா தொற்று

நலங்குத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி கிருத்திகா, மகன் அரவிந்த், மாமனார் நடராஜன் மற்றும் மாமியார் என குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

06,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: நெருங்கிய உறவினர் தொடர்பு மூலமாக நலங்குத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணனின் குடும்பத்தினருக்கு கொரோனா நுண்நச்சு பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நலங்குத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணனின் குடும்பத்தினர் வெளியில் சென்றார்களா? வெளியில் இருந்து நெருங்கிய உறவினர்கள் இவர்கள் வீட்டிற்கு வந்தார்களா என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.

கொரோனா களத்தில் இருந்த நலங்குத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

தமிழக நலங்குத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி, மகன் உள்பட குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா நுண்நச்சு தாக்குதலுக்கு அரசியல் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், நலங்குத்துறை அதிகாரிகள், மருத்துவ ஊழியர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் இலக்காகி வருகின்றனர்.

நலங்குத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் மனைவி கிருத்திகா, மகன் அரவிந்த், மாமனார் நடராஜன் மற்றும் மாமியார் என குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பாதிக்கப்பட்ட அனைவரும் அரசு கிங்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராதாகிருஷ்ணன் தனது கீச்சுப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.