தஞ்சாவூர் ஓர் இணையர்களின் மகள் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றார். ஆனால், அங்கு அவர் இறந்துவிட்டதாக தகவல் வர, பல போராட்டங்களுக்குப் பிறகு அவர் உடலை மீட்டு அடக்கம் செய்தனர். 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவள் உயிருடன் இருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்த பெற்றோர் முன்பு உடலை மீட்கப் போராடினார்கள். தற்போது உயிருடன் இருப்பவரை மீட்கும் போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் பெற்றோரை பேசியில் அழைத்த இமாகுலேட், இங்கு வேலை சிரமாக இருக்கிறது. எனக்கு கணினி தொடர்பான வேலை தரவில்லை. வீட்டு வேலை செய்துகொண்டிருக்கிறேன். என்னை மிகவும் கொடுமைப்படுத்துகிறார்கள். என்னை அனுப்பிய முகவர் புகாரியிடம் கூறி உடனே, அழைத்துக்கொள்ளுங்கள் என அழுது கொண்டே தெரிவித்தார். அங்கே எங்க மகள் என்ன பாடுபட்டுக்கொண்டிருக்கிறாளோ எனப் பதறிப்போன பெற்றோர்கள் உடனே முகவர் புகாரியிடம் போய் தங்கள் மகளை திரும்ப அழைப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்ள, அவர் சரியான தகவல் தெரிவிக்கவில்லை. இந்தநிலையில் அதே ஆண்டில் ஒருநாள் மகள் வேலைசெய்த வீட்டின் உரிமையாளர் பேசியில் அழைத்து இமாகுலேட் தூக்குப்போட்டு இறந்து விட்டதாகவும், தூதரகத்தைத் தொடர்பு கொண்டு உடலைப் பெற்றுக்கொள்ளவும் என்று தெரிவித்து விட்டு தொடர்பைத் துண்டித்துவிட்டதாகத் தெரியவருகிறது. “மகளின் உடலை மீட்டுத்தர வேண்டும் எனத் தஞ்சை மாவட்ட ஆட்சியர் முதல் தமிழக அரசு மற்றும் இந்திய அரசு வரை நாங்கள் பல மனுக்கள் அனுப்பிக் காத்திருந்தோம். ஆனால், மகள் உடல் ஊருக்கு வந்து சேரவில்லை. இறந்த மகளின் முகத்தைக்கூடப் பார்க்கமுடியவில்லையே என நாங்க கண்ணீர் வடிக்காத நாள்களே இல்லை’ என்று இமாகுலேட் தெரிவித்தார்கள். இதையடுத்து உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக்கிளையில் மகளின் உடலை மீட்டுத் தரவேண்டும் என மனு பதிகை செய்தோம். இந்த வழக்கை விசாரித்த அறங்கூற்றுமன்றம் எங்கள் மகள் இறப்பை சந்தேக மரணம் எனப் பதிவு செய்ததுடன், உடலைக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. பின்னர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு என் மகள் உடல் வந்து சேர்ந்தது. திருச்சியில் வைத்து பெட்டியைத் திறந்து காட்டியபோது எங்களுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் பெட்டியில் வந்தது எங்க மகள் இல்லை. அவர் சாயலில் உள்ள வேறொருவர். என் மனைவி, ‘இமாகுலேட் நீ எங்கம்மா இருக்க’ என அதே இடத்தில் கதறினாள். இது எங்க மகள் இல்லை எனக் கூறியதுடன் மீண்டும் அறங்கூற்றுமன்றம் போனோம். அங்கு இனக்கீற்றுஅமில (டிஎன்ஏ) சோதனை செய்து எங்க மகள் தானா என உறுதிப்படுத்துங்கள் என உத்தரவிட்டனர். கிட்டத்தட்ட எட்டு மாதம் திருச்சி மருத்துவமனையிலேயே உடல் இருந்தது. அதன் பிறகு இனக்கீற்றுஅமில (டிஎன்ஏ) சோதனை செய்து அதன் முடிவு வந்தது. சென்னைத் தடயவியல் அதிகாரிகள் கூறியதை வைத்து இந்த உடல் உங்க மகளுடையது தான் என அறங்கூற்றுமன்றத்தில் தெரிவித்தனர். சரி வேறு வழியில்லை என அரை மனதுடன் அந்த உடலை வாங்கி வந்து ஒரு பெற்றோராக என்ன செய்ய வேண்டுமோ அந்தக் கடமையைச் செய்து நாஞ்சிக்கோட்டையில் உள்ள கல்லறையில் அந்த உடலை அடக்கம் செய்தோம். அப்போதும் நாங்கள் உறுதியாக இது எங்கள் மகள் இல்லை அவள் நிச்சயம் உயிருடன் இருப்பாள் என உறவினர்களிடம் கூறினோம். சிலர் நாங்கள் ஏதோ மகள் பாசத்தில் இப்படிப் பேசுவதாக நினைத்துக் கொண்டனர். ஆனால், எங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. பதினோரு மாதங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தமிழகத்தைச் சேர்ந்த 23 பெண்கள் சவுதியில் கொத்தடிமைகளாக உள்ளனர் என காணெளியுடன் செய்தி வந்தது. அப்போது நாங்கள் அந்தச் செய்தியைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அதில் எங்கள் மகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனோம். பின்னர் நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உடனே நேரடியாக டெல்லிக்குச் சென்று தலைமைஅமைச்சர், உள்துறை அமைச்சர் அலுவலகங்களில் நடந்தவற்றை விளக்கமாக எழுதி மனு கொடுத்தோம். கிட்டத்தட்ட பத்து மாதம் ஆச்சு. ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை. பத்து மாதம் வயிற்றில் வைத்து பெற்றெடுத்த தாயிக்குத் தானே தெரியும் அதன் வலியும் வேதனையும். முதலில் உடலை மீட்டுத் தாருங்கள் என்றோம். இப்போது அவள் உயிருடன் இருப்பதை அறிந்து உயிருடன் இருக்கிறார் மீட்டுத் தாருங்கள் என்கிறோம். ஆனால், அதிகாரிகளுக்கும் சரி, இந்த அரசுகளுக்கும் சரி எங்க வேதனையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. மீண்டும் அறங்கூற்றுமன்றத்திற்குச் சென்று எங்க மகளை மீட்டுத் தரச் சொல்லவிருக்கிறோம். அவள் என்ன நிலையில் இருக்கிறார், என்ன பாடுபடுகிறார் என நினைக்கும் போது ஒரு பெற்றோராக எங்க மனசு பதறித் தவிக்குது. அவளை மட்டுமல்ல அந்த 23 பேரும் சீக்கிரமே மீட்கப்பட வேண்டும்” என்று தெரிவிக்கின்றனர் பெற்றோர்கள் -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல, தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த் தொடர்நாள் எண்:18,70,368.
01,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தஞ்சாவூர் பிலோமினா நகர் பகுதியைச் சேர்ந்த இணையர் அந்தோணி யாகப்பா பவுலின் மார்த்தாள் மகள் இமாகுலேட். கணினி பாடப்பிரிவில் பட்டப்படிப்பு படித்துள்ளார். குடும்ப வறுமை காரணமாக ஒரு பெண்ணாக இருந்தும் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, துணிச்சலாக வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்ல முடிவெடுத்தார். அதன்படி தஞ்சை அய்யம்பேட்டையில் உள்ள பயணஏற்பாட்டாளர் புகாரி என்பவர் மூலமாக, கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கணினி தொடர்பான பணி என்பதாக சவுதிஅரேபியா நாட்டிற்குச் சென்றார்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



