28,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தொடங்கப் படாத, முகவரியே இல்லாத ஜியோ பல்கலைக் கழகம் சிறந்த பல்கலைக்கழகம் என்று பட்டியல் இடுகிறது பாஜக என்று பார்த்தால், இப்போது தொடங்கப் படாத முகவரியே இல்லாத ரஜினி கட்சியோடு வரும் நாடளுமன்றத் தேர்தலில் கூட்டணி என்கிறது பாஜக! அமித் ஷாவின் முதன்மையான அரசியல் நகர்த்தல்- இப்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சோதனைகளை நடத்துவதன் மூலம், அவரையும் பா.ஜ.கவுக்கு எதிரானவராகக் காட்ட முற்படுகின்றனர். மறுபுறம் சீமானும் அன்புமணியும் பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகளை ஓரளவுக்குப் பிரிப்பார்கள். பா.ஜ.க எதிர்ப்பு வாக்குகள் பலமுனைகளாகப் பிரியும்போது, ரஜினி- மோடி கூட்டணி பெருவாரியாக வெற்றி பெறும் என்பது அமித் ஷாவின் திட்டமாம். அதை நோக்கிதான் வேகமாகச் செயல்படத் தொடங்கியிருக்கிறார்களாம். தமழிக மக்களின் நாடி பிடித்துப் பார்க்கவெல்லாம் அமித்ஷா என்ன? எந்தக் கொம்பனாலும் முடியாது என்பதை நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் புரிந்து கொள்ளும் அமித்ஷா வகையறா! -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,846.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



