28,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமுதன் இயக்கத்தில் சிவா நடித்த தமிழ் படம் 2 இன்று வெளியாகியுள்ளது. படத்தை விளம்பரப்படுத்த ஊர், உலகத்தில் உள்ளவர்களை எல்லாம் மரண கலாய் கலாய்த்து ஏகப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டி விளம்பரப் படுத்தப் பட்ட படம். இந்நிலையில் அந்த படம் ஓடும் திரையரங்குகளில் படத்தை தாண்டி சிரிப்பு சப்தம் பலமாக கேட்கிறதாம். அமெரிக்காவில் ஒரு திரையரங்கம் அதிர்ந்து இப்போ தான் பார்க்கிறேன். அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா வாழ்க என்று படம் பார்த்த ஒருவர் பாராட்டியுள்ளார். மனஅழுத்தத்தை போக்கும் வகையில் அமைந்துள்ளது தமிழ் படம் 2. அமுதன் மற்றும் குழுவினருக்கு பாராட்டுகள் என்கிறார் மற்றொருவர். குற்றம் சொல்லியே பேர் வாங்கும் தமிழ்ப்படம் இரண்டாவது பாகமும் நன்றாக வந்திருக்கிறதாம். இணையத்தில் அமெரிக்கா வரை பாராட்டு மழைதான். காவிரியும் நிரம்பி வழிகிறது. சிவா ரசிகர்கள் மனமும் மகிழ்ச்சியில் நிறைகிறது. -தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,846.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.



